பழனியில் ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அன்வர்தீன் சிறையில் நெஞ்சுவலியால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”முழுமையான மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகே கைதிகள் சிறையில் அடைக்கப்படும் சூழலில், அரசின் நில மோசடியை அம்பலப்படுத்திய வழக்கில் தொடர்புடையவருக்கு மட்டும் எப்படி திடீரென நெஞ்சுவலி ஏற்படும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த வழக்கில் மிக முக்கியச் சாட்சிகளாகக் கருதப்படும் இருவருக்கு ஒரே நேரத்தில் உடல்நலக்குறைவு ஏற்படுவது பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைக் காலமாக சிறைகளிலும், காவல் நிலையங்களிலும் நடக்கும் மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்தச் சம்பவத்தையும் சாதாரணமான ஒரு நிகழ்வாகக் கடந்து போக முடியாது என தெரிவித்துள்ள அவர், அன்வர்தீன் உயிரிழந்த போது பணியில் இருந்த சிறைக் காவல் அதிகாரிகளிடம் தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், இந்த மரணத்தின் பின்னணியில் உள்ள உண்மைத்தன்மையை கண்டறிய முறையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சார்பதிவாளர் மணிகண்டனுக்குத் தேவையான உரிய சிகிச்சை வழங்கி அவரது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Read More : தவெகவில் த்ரிஷா இணைகிறாரா? முக்கிய பொறுப்பு வழங்கப்படுமா? விஜய்யின் அடுத்த அரசியல் நகர்வு..!



