’பிரதமர் மோடியால் தமிழகத்தில் கால் செருப்பை கூட தொட்டு பார்க்க முடியாது’..!! ஆர்.எஸ்.பாரதி காட்டம்..!!

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற வேட்பாளார் டிஆர்பாலுவை ஆதரித்து அமைச்சர் சேகர் பாபு தலைமையில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “எங்கே மோடி வாலாட்டினாலும் இங்கு ஆட்ட முடியாது. வட மாநிலம், ஆந்திரா என அனைவரையும் மிரட்டி வருகிறார்கள். ஆனால், தமிழகத்தில் கால் செருப்பை கூட அவரால் தொட்டு பார்க்க முடியாது. பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்ததன் மூலம் மக்கள் பயனடைந்துள்ளதால் வாக்களிக்க தயாராக உள்ளனர்.

இதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் பிரதமர் மோடி ஏற்கனவே 4 முறை வந்துவிட்டார். இன்னும் 4 முறை வர உள்ளார். எத்தனை முறை தமிழ்நாட்டிற்கு வந்தாலும் பருப்பு வேகாது. ராகுல் காந்தி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற ஒரு தேர்தல் வாக்குறுதிக்காகவே ஓட்டு போடலாம்” என்று பேசியுள்ளார்.

Read More : Gold | ரூ.53,000-ஐ நெருங்கும் தங்கம் விலை..!! ஒரே நாளில் ரூ.840 உயர்வு..!! நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..!!

Chella

Next Post

’’ப.சிதம்பரம், ராகுல் காந்திக்கு வேலையே இல்லை’’..!! அண்ணாமலை கடும் விமர்சனம்..!!

Sat Apr 6 , 2024
நாட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். உண்மையில் ப.சிதம்பரம், ராகுல் காந்திக்குத்தான் வேலையில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை சூலூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். சோமனூர் பகுதி அருகே செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”நாட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை என காங்கிரஸ் கட்சியின் […]

You May Like