ரூ.4,500 கோடி மதிப்பிலான திட்டப் பணி…! இன்று மோடி தொடங்கி வைக்கும் திட்டங்கள் என்னென்ன…?

pm modi 1 11zon

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

தூத்துக்குடி விமான நிலையம் ரூ.381 கோடி செலவில், சர்வதேச தரத்துக்கு இணையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 1,350 மீட்டர் நீளமுள்ள விமான ஓடுதளம் தற்போது 3,115 மீட்டர் நீளமுள்ள ஓடுதளமாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே நேரத்தில் 5 விமானங்களை நிறுத்த முடியும். ஜூலை 26-ஆம் தேதி தூத்துக்குடி வருகை தரும் நமது பிரதமர் அவர்கள், விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைத்து நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கவுள்ளார். இதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் மத்திய அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ள பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைக்கவுள்ளார்.


தஞ்சாவூர் – விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தில் 2-ம் கட்டமான சோழபுரம் முதல் சேத்தியாத்தோப்பு வரையில் ரூ.2,357 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலை திட்டம். ரூ.200 கோடி மதிப்பில் ஆறு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ள தூத்துக்குடி துறைமுகச் சாலை. ரூ.99 கோடியில் மதுரை – போடிநாயக்கனூர் இடையே மின்மயமாக்கப்பட்டுள்ள ரயில் பாதை. ரூ.650 கோடியில் நாகர்கோவில் டவுன் – நாகர்கோவில் சந்திப்பு – கன்னியாகுமரி இடையிலான இரட்டை ரயில் பாதை., ரூ.283 கோடியில் ஆரல்வாய்மொழி – நாகர்கோவில் சந்திப்பு மற்றும் திருநெல்வேலி – மேலப்பாளையம் இடையிலான இரட்டை ரயில் பாதை என, சுமார் ரூ.4.500 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை இந்தமுறை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கவுள்ளார்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கட்டப்பட்டு வரும் அலகு-3 ‘மற்றும் அலகு 4-ல் உற்பத்தியாகும் மின்சாரத்தை கொண்டுசெல்வதற்காக ரூ.548 கோடியில் மின்பரிமாற்ற கட்டமைப்புக்கும் அடிக்கல் நாட்டுகிறார். தூத்துக்குடியில் சர்வதேச தரத்தில் ரூ.452 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள விமான நிலையத்தின் திறப்பு விழா இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. இதற்காக மாலத்தீவில் இருந்து இந்திய விமானப் படைக்கு சொந்தமான தனி விமானத்தில் இன்று இரவு 7.50 மணியளவில் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு பிரதமர் வருகிறார். அவருக்கு முக்கியப் பிரமுகர்கள் வரவேற்பு அளிக்கின்றனர்.

Vignesh

Next Post

நாடே பரபரப்பு!. ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை!. ராணுவம் தயார் நிலையில் இருக்க வேண்டும்!. முப்படை தளபதி அதிரடி!

Sat Jul 26 , 2025
ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. ஆண்டு முழுவதும், அதாவது 365 நாளும், 24/7 என்ற அடிப்படையில் அதிக அளவிலான ராணுவ தயார் நிலை இருக்க வேண்டும் என்று முப்படை தளபதி அனில் சவுகான் அறிவித்துள்ளார். காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இத்தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த […]
anil chauhan 11zon

You May Like