ரூ.1,400 கோடிக்கு சொத்து..!! எக்கச்சக்க முதலீடு..!! வெளிநாடுகளில் குடியிருப்பு..!! யார் இந்த பெண் வேட்பாளர்..?

கோவாவில் பாஜக சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் ஒருவரின் சொத்து மதிப்பு மிரள வைக்கும் அளவுக்கு உள்ளது.

வரும் மக்களவை தேர்தலில் தெற்கு கோவா தொகுதியில் பாஜக சார்பில் பல்லவி (49) என்பவர் போட்டியிடுகிறார். அதற்கான வேட்புமனுவை வேட்புமனு நேற்றைய தினம் தாக்கல் செய்தார். அப்போது அவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் கணவருடன் சேர்ந்து தனக்கு ரூ.1,400 கோடியில் சொத்துகள் உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

அந்த வேட்புமனுவில், வேட்பாளர் பல்லவியும், கணவர் ஸ்ரீனிவாஸ் டெம்போவும் கால்பந்து, ரயில் எஸ்டேட், கப்பல் கட்டும் தொழில், கல்வி முதல் சுரங்கம் ஆகிய துறைகளில் முதலீடு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பல்லவிக்கு ரூ.255.4 கோடி மதிப்பில் அசையும் சொத்துக்களும், ரூ.28.2 கோடி மதிப்பில் அசையா சொத்துக்களும் உள்ளது.

கணவர் ஸ்ரீநிவாசுக்கு ரூ.994.8 கோடி மதிப்பில் அசையும் சொத்துக்களும், ரூ.83.2 கோடி மதிப்பில் அசையா சொத்துக்களும் உள்ளது. இவர்களுக்கு கோவாவை தவிர நாட்டின் பல இடங்களில் சொத்துக்கள் உள்ளது. இதை தவிர லண்டனில் ரூ.10 கோடி மதிப்புள்ள குடியிருப்பும், துபாயில் ரூ.2.5 கோடி மதிப்புள்ள குடியிருப்பும் உள்ளது. மேலும், பல்லவியிடம் ரூ.5.7 கோடி மதிப்பு தங்கம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More : கரடிகளை வேட்டையாட அனுமதி..!! மானியமும் இருக்காம்..!! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!!

Chella

Next Post

'உங்க கடமையை முடிக்க மாலை 6 மணி வரை தான் டைம்’..!! ’மிஸ் பண்ணிடாதீங்க’..!! சத்யபிரதா சாஹூ அறிவிப்பு..!!

Thu Apr 18 , 2024
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 85 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபடும் நபர்கள் தபால் வாக்கு பதிவு முறையில் தங்கள் வாக்கை பதிவு செய்ய முடியும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதற்காக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, தபால் வாக்குப்பதிவு விருப்ப விண்ணப்ப படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டு பெறப்பட்டது. தேர்தல் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள், ஊழியர்கள் தேர்தல் நாளில் வாக்களிக்க முடியாது என்பதால், அவர்களுக்கும் […]

You May Like