‘உங்க கடமையை முடிக்க மாலை 6 மணி வரை தான் டைம்’..!! ’மிஸ் பண்ணிடாதீங்க’..!! சத்யபிரதா சாஹூ அறிவிப்பு..!!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 85 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபடும் நபர்கள் தபால் வாக்கு பதிவு முறையில் தங்கள் வாக்கை பதிவு செய்ய முடியும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதற்காக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, தபால் வாக்குப்பதிவு விருப்ப விண்ணப்ப படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டு பெறப்பட்டது.

தேர்தல் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள், ஊழியர்கள் தேர்தல் நாளில் வாக்களிக்க முடியாது என்பதால், அவர்களுக்கும் தபால் வாக்குப்பதிவு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 18ஆம் தேதி மாலை 6 மணி வரை தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் தபால் வாக்கு பதிவு செய்யலாம் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பயிற்சி மையங்களில் வாக்களிக்க முடியாதவர்கள் தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகங்களுக்கு சென்று தங்களின் தபால் வாக்குகளை பதிவு செய்யலாம் என்று தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நாளை (ஏப்ரல் 19) மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More : ரூ.1,400 கோடிக்கு சொத்து..!! எக்கச்சக்க முதலீடு..!! வெளிநாடுகளில் குடியிருப்பு..!! யார் இந்த பெண் வேட்பாளர்..?

Chella

Next Post

நாளை வாக்குப்பதிவு..!! ஐசியூவில் மன்சூர் அலிகான்..!! எப்படி இருக்கிறார்..? உடல்நிலையில் பின்னடைவா..?

Thu Apr 18 , 2024
வேலூர் மக்களவை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் கலக்கியவர் நடிகர் மன்சூர் அலிகான். பிறகு பட வாய்ப்புகள் இன்றி தவித்து வந்தார். தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான நடிகர் விஜய்யின் ‛லியோ’ திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு நடிகை த்ரிஷா தொடர்பாக அவர் கூறிய கருத்துகள் சர்ச்சையை கிளப்பின. அந்த பிரச்சனைகளை […]

You May Like