பி.டி.ஆர் விடியோ குறித்த கேள்வி…..! எனக்கு அதுக்கெல்லாம் டைம் இல்ல ஒரே போடாக போட்ட முதல்வர்….!

கடந்த 2️ வாரங்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் ஒரு ஆடியோ வெளியானது. ஆனாலும் அது போலியானது என்று டிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்து இருந்தார்.


இத்தகைய சூழலில், அவர் தொடர்பாக மற்றொரு ஆடியோவை தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இது தொடர்பாக ட்விட்டரில் விளக்கம் அளித்த பழனிவேல் தியாகராஜன் ஆடியோவில் இருப்பதைப் போல தான் யாரிடமும் பேசவில்லை என்று கூறி இருந்தார்.

இந்த நிலையில் தான் தமிழக முதல்வரும்,திமுக தலைவருமான ஸ்டாலின் உங்களில் ஒருவன் பதில்கள் பதிலில் பி டி ஆர் ஆடியோ தொடர்பாக பதிலளித்துள்ளார்.கேள்வி: நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் பேரில் வெளியான ஆடியோ பற்றி?

பதில்: இது தொடர்பாக அவரே 2 முறை விரிவான விளக்கம் கொடுத்துவிட்டார் மக்களுக்கான பணியை செய்யவே எனக்கு சரியாக இருக்கிறது. அதோடு இது தொடர்பாக பேசி மட்டமான அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு நான் விளம்பரம் தேடித்தர விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

Next Post

பயணத்தின்போது வரும் வாந்தி, தலைச்சுற்றலை எப்படி தவிர்ப்பது..? சூப்பர் டிப்ஸ் இதோ..!!

Tue May 2 , 2023
பயணம் செய்வது என்பது அனைவருக்குமே பிடித்தமான ஒன்று தான். ஆனால், ஒரு சிலருக்கு பேருந்து அல்லது காரில் பயணம் செய்யும் போது தலைசுற்றல், வாந்தி, மயக்கம் போன்ற தொந்தரவுகள் இருக்கும். இதனால் திட்டமிட்ட பயணமே கெட்டுப் போகக் கூடும். அப்படி ஆகாமல் பார்த்துக்கொள்ள சில டிப்ஸ் தான் இங்கே தர இருக்கிறோம். பயண நோய் அல்லது கைனடோசிஸ் என்றும் அறியப்படும் இயக்க நோய், பார்வை மற்றும் உள் காது சமநிலை […]
பயணத்தின்போது வரும் வாந்தி, தலைச்சுற்றலை எப்படி தவிர்ப்பது..? சூப்பர் டிப்ஸ் இதோ..!!

You May Like