ஹரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தை சேர்ந்தவர் புஷ்பா. யூடியூபர் ஆன இவர் தனது கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். யூடியூப் சேனல் மூலம் நல்ல வருமானத்தையும் ஈட்டி வந்தார். அப்போதுதான், ஹர்சனா கிராமத்தை சேர்ந்த சந்தீப் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. சந்தீப்பும் ஒரு யூடியூப் சேனல் வைத்து நடத்தி வருகிறார். இருவரின் பழக்கம் நாளடைவில் தகாத உறவில் முடிந்தது.
ஒரு கட்டத்தில் கணவரை பிரிந்த புஷ்பா சந்தீப் உடன் வாழ்ந்து வந்தார். இருவரும் யூடியூபர்கள் என்பதால், இருவரும் சேர்ந்து ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு வந்தனர். இதன் மூலம் நல்ல வருமானமும் கிடைத்தது. இந்நிலையில், கடந்த 5ம் தேதி, சந்தீப் வீட்டிலேயே, புஷ்பா தூக்கில் தொங்கிவிட்டார்.. புஷ்பாவின் சடலத்தை கண்டு சந்தீப் கதறி கதறி அழுதார்.. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், புஷ்பாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் புஷ்பா கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனிடையே புஷ்பா புஷ்பா என கண்ணீர் வடித்த சந்தீப் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் சந்தீப்பிடம் விசாரணையை நடத்தினர். அதன் பின் புஷ்பாவை கொன்றது நான் தான் என சந்தீப் ஒப்புக்கொண்டார்.
கணவரை விட்டு பிரிந்து வந்ததுமே, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு புஷ்பா சந்தீப்பை வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், சந்தீப் புஷ்பாவை திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால் இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று இருவருக்கும் தகறாரு ஏற்படவே ஆத்திரமடைந்த சந்தீப் புஷ்பாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதையடுத்து சந்தீப்பை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
Read more: இந்த 3 பேர் மட்டும் பாஸ்போர்ட் இல்லாமல் உலகில் எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம்.. யார் யார்?



