தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள், “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி இன்று தஞ்சாவூரின் பல பகுதிகளில் பயணம் மேற்கொண்டார். பட்டுக்கோட்டையில் சுற்றுப் பயணத்தின் பொது உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, “அதிமுக உங்கள் கட்சி.. அதற்கு தலைவர்கள் கிடையாது, மக்களாகிய நீங்க தான் தகலைவர்கள். திமுகவை போல குடும்ப உறுப்பினர்கள் அதிமுகவில் ஆட்சிக்கு வருவது கிடையாது. கட்சிக்கு விசுவாசமாக இருந்தால் யாராக இருந்தாலும் அதிமுகவில் உயர்ந்த இடத்துக்கு வரலாம். ஆனால் திமுகவில் கருணாநிதி குடும்பத்தை தவிர யாரும் வர முடியாது. அந்த குடும்பம் திமுகவை பட்டா போட்டுள்ளது. திமுக என்பது கட்சி இல்லை “கார்ப்பரேட் கம்பெனி”. அந்த கம்பெனியில் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் தான் அங்கு பதிவுக்கு வர முடியும். ஆட்சி அதிகாரத்துக்கு வர முடியும். ஆனால் அதிமுக ஜனநாயக ரீதியாக அமைக்கப்பட்ட கட்சி.
2026ல் அதிமுக ஆட்சி அமைந்ததும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சகோதரிகள் தாய்மார்கள் என அனைத்து பெண்களுக்கும் அற்புதமான சேலை வழங்கப்படும். கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.2500 கொடுக்கப்பட்டது. ஆனால் திமுகவின் இன்றைய ஆட்சியில் பொங்கல் தொகுப்பாக ஒழுகிய வெல்லத்தை மட்டுமே கொடுத்தார்கள். அதிலும் ஊழல் செய்த கட்சி திமுக.
எங்களுடைய ஆட்சியில் கை இல்லாதவர் போனால் கையோடு வந்தார். ஆனால் திமுக ஆட்சியில் காலோடு போனால் கூட கால் இல்லாமல் வருகிறார்கள், உயிரோடு போனால் உயிர் இல்லாமல் வருகிறார்கள், அப்படி கேவலமான ஆட்சி நடக்கிறது. இன்றைக்கு மருத்துவமனையில் மருந்து மாத்திரை கிடையாது.
திருமாவளவன் அவர்களே அதிமுகவை பற்றி கவலைப்பட வேண்டாம், உங்கள் கட்சியை பற்றி கவலைப்படுங்கள். திமுக விடுதலை சிறுத்தைகள் கட்சியை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கி கொண்டு இருக்கிறது. பாதி விழுங்கிட்டங்கா இனிமேயாவது உங்கள் கட்சியை காப்பாற்றி கொள்ளுங்கள். உங்களின் மாநில மாநாட்டிற்கு அனுமதி கொடுக்கவே திமுக அரசு தடுமாறியாது. அதேபோல மதுரையில் கொடியேற்றத்திற்கு அனுமதி கொடுக்கல, கூட்டணி கட்சிக்கே திமுக நெருக்கடி கொடுக்கிறது.
டாஸ்மாக் பத்து ரூபாய் என்றாலே நினைவுக்கு வருபவர் செந்தில் பாலாஜி. அவர் அமைச்சராக இருக்கும்போது டாஸ்மாக் கடையில் ஒரு பாட்டில் வாங்க வேண்டும் என்றால் பத்து ரூபாய் அதிகமாக கொடுத்து தான் வாங்க வேண்டும். தமிழ்நாட்டில் 1.5கோடி பாட்டில்கள் ஒருநாளைக்கு விற்கப்பட்டது. அதன்படி ஒரு நாளைக்கு 15 கோடி, மாதத்திற்கு 450 கோடி, வருடத்திற்கு 5400 கோடி என கொள்ளையடித்த கட்சி திமுக. இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்க ஊருக்கே அரசாங்கம் என்றால் அது திமுக அரசாங்கம் தான்.
Read More: ஒன்னு.. குரூப் 4 தேர்வை ரத்து பண்ணுங்க.. இல்லன்னா இதை செய்யுங்க.. அண்ணாமலை காட்டம்..