Exam: காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கும்… பள்ளி கல்வித்துறை அறிவிப்பு…!

School Exam 2025

பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.


தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அனைத்து விதமான பள்ளிகளிலும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 10 முதல் 26-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.10-ல் தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெறும். மேலும், 6 முதல் 10-ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் செப்டம்பர் 15-ல் தொடங்கி 26-ம் தேதி வரை நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்; தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அனைத்து விதமான பள்ளிகளிலும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 10 முதல் 26-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.10-ல் தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெறும். மேலும், 6 முதல் 10-ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் செப்டம்பர் 15-ல் தொடங்கி 26-ம் தேதி வரை நடத்தப்படும்.

இதற்குரிய கால அட்டவணை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 10, 12-ம் வகுப்புக்கு காலையிலும், 11-ம் வகுப்புக்கு மதியமும் தேர்வுகள் நடைபெறும். 6, 8-ம் வகுப்புக்கு காலையிலும், 7, 9-ம் வகுப்புக்கு மதியமும் தேர்வு நடத்தப்படும். இதைத் தொடர்ந்து 6 முதல் 12-ம் வகுப்புக்கு செப். 27 முதல் அக்.5 வரை விடுமுறை வழங்கப்படும். இந்த விடுப்பு முடிந்து பள்ளிகள் மீண்டும் அக்டோபர் 6-ம் தேதி திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

டயமண்ட் லீக்!. சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார் ஜெர்மனி வீரர் வெப்பர்!. நீரஜ் சோப்ராவுக்கு வெள்ளிப்பதக்கம்!.

Fri Aug 29 , 2025
டைமண்ட் லீக் இறுதிப்போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில், 85.01 மீ., தூரம் ஈட்டி எறிந்து இந்தியா வீரர் நீரஜ் சோப்ரா 2வது இடம் பிடித்தார். ஜெர்மனியின் வெப்பர், 90.51 மீ., எறிந்து அபார சாதனையுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். ஸ்விட்சர்லாந்தின் சூரிச் நகரில் டைமண்ட் லீக்கின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் ஜெர்மனி வீரர் ஜூலியன் வெப்பர், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, ட்ரினிடாட் & டொபாகோ வீரர் கெஷோர் வால்கட், கிரெனடாவின் […]
neeraj chopra 11zon

You May Like