தமிழ்நாடு முழுவதும் நியாய விலை கடைகளில் கேழ்வரகு வழங்கும் திட்டம் இன்று முதல் ஆரம்பம்……! களத்தில் இறங்கிய ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்…..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் செயல்பட்டு வரும் நீலகிரி உருளைக்கிழங்கு கூட்டுறவு சங்கத்தில் தமிழக கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அதன் பிறகு அவரே களத்தில் இறங்கி உருளைக்கிழங்குகளை தரம் பிரித்தது அங்கு இருந்த தொழிலாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


மேலும் இதன் பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன் உலக அளவில் சிறுதானிய ஆண்டு என்று அறிவிக்கப்பட்டிருக்கின்ற நிலையில், முதல் கட்டமாக நீலகிரி மற்றும் தர்மபுரி போன்ற மாவட்டங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2 கிலோ கீழ்வரகு வழங்கப்பட இருப்பதாக கூறி இருக்கிறார்.

கேழ்வரகு உற்பத்தியை பெருக்கி தமிழ்நாடு முழுவதிலும் அனைத்து நியாய விலை கடைகளிலும் விநியோகம் செய்வதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

Next Post

தலைக்கேறிய போதை..!! வடிவேலு பாணியில் விளையாடிய நண்பர்கள்..!! கடைசியில் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்..!!

Wed May 3 , 2023
சென்னையை அடுத்த எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் மனோஜ் (24). இவர், கூலித் தொழிலாளி ஆவார். இவரின் நண்பர் கோழிசெல்வம். இவரும் அதே பகுதியில் வசித்து வந்திருக்கிறார். நண்பர்கள் இருவரும் நேற்று மாலையில் திருவொற்றியூர் எம்ஜிஆர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றுள்ளனர். இருவருக்கும் போதை தலைக்கு ஏறியதும் டாஸ்மாக் கடைக்கு முன்பாக நின்று ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டனர். பின்னர் இருவரும் கத்தியை […]
crime scene murder 1

You May Like