திருமா, வைகோ, மம்தா ஆஜர்… ஸ்டாலின், கெஜ்ரிவால் மிஸ்ஸிங்!. இந்தியா கூட்டணி கூட்டத்தில் திடீர் திருப்பம்!. டெல்லியில் போஸ்டர் யுத்தம்!

INDIA bloc meeting 30kb

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் (SIR) பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகக் குற்றம்சாட்டி, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவருவது மற்றும் நாடு தழுவிய போராட்டங்களை முன்னெடுப்பது குறித்து விவாதிக்க ‘இந்தியா கூட்டணியின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது.


கூட்டணியின் இரண்டாவது முக்கிய ஆலோசனை கூட்டமான இதில், திமுக மற்றும் ஆம் ஆத்மி ஆகிய முக்கிய கூட்டணிக் கட்சிகள் பங்கேற்காமல் புறக்கணித்தன. மேலும், உத்தரப் பிரதேச மாநிலங்களவைத் தேர்தல் பணிகள் காரணமாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் நேரில் பங்கேற்காத நிலையில், அவருக்குப் பதிலாக அக்கட்சியின் பிரதிநிதியாக ஹரேந்திர மாலிக் கலந்துகொண்டார்.

இக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி, தேஜஸ்வி யாதவ், உமர் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி மற்றும் தமிழ்நாட்டிலிருந்து விசிக தலைவர் தொல். திருமாவளவன், மதிமுக தலைவர் வைகோ உள்ளிட்ட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் நேரில் பங்கேற்றனர். ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் காணொலி வாயிலாகக் கலந்துகொண்டனர்.

தேர்தல் ஆணையத்தின் முடிவுகளில் மற்ற இரு ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் 14 முறை தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்ததாகத் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவி நீக்கம் செய்யும் நோட்டீஸ் வரைவு குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படவுள்ளது. இதனிடையே, ‘இந்தியா’ கூட்டணித் தலைவர்களை விமர்சித்து டெல்லியின் முக்கிய இடங்களில் சுவரொட்டிகள் வைக்கப்பட்டுள்ளதால் அரசியல் களத்தில் பரபரப்பு நிலவுகிறது.

1newsnationuser5

Next Post

ஒரே நாளில் ஹாட்ரிக் கோல்ட்!. வில்வித்தையில் 10-வது தங்கத்தை தட்டித்தூக்கிய இந்திய ஆடவர் அணி!. சாஹில் - குஷால் - கணேஷ் அசாத்திய சாதனை!

Wed Sep 30 , 2026
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஆண்களுக்கான காம்பவுண்ட் வில்வித்தை (Compound Archery) இறுதிப் போட்டியில் இந்திய அணி சீனாவை 238-237 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் இந்தியா தனது 10-வது தங்கப் பதக்கத்தைப் பதிவு செய்துள்ளது. சாஹில் ஜாதவ், குஷால் தலால் மற்றும் ஆந்திராவை சேர்ந்த திருமுரு கணேஷ் மணி ரத்னம் ஆகியோரைக் கொண்ட இந்திய அணி, போட்டியின் பாதியில் […]
mens compound archery gold 30kb

You May Like