தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறாது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், நீலகிரி, கோவை, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, ராணிப்பேட்டை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று காலையில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக அந்தந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது வழக்கம். அந்த வகையில் இன்று காலை 6.30 மணி நேர நிலவரப்படி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்றும், வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்திலும் பள்ளிகள் வழக்கம் போல இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார்.
Read more: சத் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் 1,500 சிறப்பு ரயில்கள்..! இந்திய ரயில்வே அறிவிப்பு…!



