இன்று முதல் அக்டோபர் 3-ம் தேதி வரை மழை…! 60 கி.மீ வேகத்தில் காற்று… வானிலை மையம் எச்சரிக்கை…!

rain

தமிழகத்தில் இன்று முதல் அக்டோபர் 3-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், தெற்கு ஒடிசா – சத்தீஸ்கர் பகுதிகளில் நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும். தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது.

இதன் காரணமாக இன்று முதல் அக்டோபர் 3-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நாளை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

Flash | கடும் கோபத்தில் மக்கள்..!! விஜய் சுற்றுப்பயணத்திற்கு அதிரடி தடை..? தவெகவினர் அதிர்ச்சி..!!

Sun Sep 28 , 2025
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று (செப்.27) கரூரில் மேற்கொண்ட 3ஆம் கட்டப் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 39 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அவர்களில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என பலரும் அடங்குவர். மேலும், பலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தமிழ்நாட்டு மட்டுமின்றி நாட்டையே உலுக்கியுள்ளது. 2026 சட்டசபைத் தேர்தலை முன்னிட்டுப் பல்வேறு […]
TVK Vijay 2025 2

You May Like