நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழை…! வானிலை மையம் எச்சரிக்கை

rain 2025 2

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். வரும் 6-ம் தேதி ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழையும், 7 முதல் 9-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இன்றும், நாளையும் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு, வடக்கு மற்றும் தென்மேற்கு அரபிக்கடலின் வடக்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், கொங்கன் கோவா மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக IT WING நிர்வாகி.. திமுக நிர்வாகிகள் காரணம்..? - வெளியான அதிர்ச்சி ஆடியோ

Fri Jul 4 , 2025
திருப்பூர் மாவட்டம் குண்டடம் மேற்கு ஒன்றிய அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராக இருந்த செல்வானந்தம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக நிர்வாகிகளின் மிரட்டலே எனது இந்த முடிவுக்கு காரணம் என வாட்ஸ் அப்பில் அளித்த மரண வாக்குமூலம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்வானந்தம், கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்காச்சோளம் வியாபாரம் செய்து வந்தார். வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் கடன்களை தாமதமாகச் […]
admk it wing

You May Like