இந்தியா முழுவதும் நாளைய ரம்ஜான் கொண்டாட்டம்.!! தலைமை ஹாஜி அறிவிப்பு.!!

இஸ்லாமியர்களின் புனித பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை இந்தியா முழுவதும் நாளை கொண்டாடப்பட இருக்கிறது. இஸ்லாமியர்கள் ஒவ்வொரு வருடமும் ரம்ஜான் மாதம் 30 நாள் நோன்பிருந்து பிறை பார்த்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவார்கள். ஷவ்வால் மாதத்தின் பிறை தென்பட்டதும் தங்கள் விரதத்தை முடித்து பெருநாள் கொண்டாடுவார்கள்.

இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் இனிய இரண்டு கடமைகளான நோன்பு மற்றும் ஜகாத் இரண்டும் ரம்ஜான் கொண்டாட்டங்களோடு வருவதால் இந்தப் பண்டிகை சிறப்பு வாய்ந்ததாக கொண்டாடப்படுகிறது. இவர்கள் கடந்த மார்ச் மாத முதல் நோன்பிருந்து வந்த நிலையில் சாப்டியா அரேபியா உள்ளிட்ட உலகின் பல பகுதிகளிலும் ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது.

இந்தியாவிலும் தமிழகத்திலும் பிறை தென்படாததால் ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவித்திருந்தார். இந்நிலையில் தமிழகத்தின் சில பகுதிகளில் இரவு 10 மணிக்கு பிறை தென்பட்டதாக கூறி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ரம்ஜான் பண்டிகையை இன்று கொண்டாடினர் . இதனால் நாளை விடுமுறை இருக்குமா என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக அறிவித்துள்ள தலைமை ஹாஜி தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் நாளை ரம்ஜான் பெருநாள் கொண்டாடப்பட இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இதனால் எந்த குழப்பமும் இன்றி நாளை தான் ரம்ஜான் விடுமுறை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Post

டாட்டூக்களை உடனடியாக அகற்ற வேண்டும்!… இல்லையென்றால் கடும் நடவடிக்கை!… காவல்துறை அதிரடி!

Thu Apr 11 , 2024
Tattoo: கண்ணியத்தை இழிவுபடுத்தும் வகையில் உடலில் வரையப்பட்டுள்ள டாட்டூக்களை 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என்று ஒடிசாவின் சிறப்புப் பாதுகாப்புப் பட்டாலியன் படையினருக்கு அம்மாநில காவல் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் காவல்துறை துணை ஆணையர் வெளியிட்டுள்ள உத்தரவில், ஒடிசாவில் முதலமைச்சர் இல்லம், ஆளுநர் மாளிகை, மாநில தலைமைச் செயலகம், சட்டப் பேரவை, உயர் நீதிமன்றம் போன்ற முக்கிய இடங்களுக்கு எஸ்எஸ்பி பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு அளிக்கின்றனர். […]

You May Like