அதிரடி…! ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதிலாக 2 கிலோ சிறு தானியம்‌…! இன்று முதல் நேரடி கொள்முதல்‌ ஆரம்பம்…!

ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதிலாக இரண்டு கிலோ ராகி (சிறு தானியம்‌) விநியோகம்‌ செய்யப்பட உள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டத்தில்‌ உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோக திட்டத்தின்‌ கீழ்‌ ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக, சோதனை அடிப்படையில்‌ ஒரு குடும்பத்துக்கு மாதம்‌ ஒன்றுக்கு அரிசிக்கு பதிலாக இரண்டு கிலோ ராகி (சிறு தானியம்‌) விநியோகம்‌ செய்யப்படும்‌ என அரசால்‌ அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


இதன்‌ அடிப்படையில்‌ தருமபுரி மாவட்டத்தின்‌ மாதாந்திர தேவை 440மெட்ரிக்‌ டன்‌ எனவும்‌, இதற்காக ராகி சிறு தானியத்தை சிறு /குறு விவசாயிகளிடமிருந்து கொள்முதல்‌ செய்திட தமிழ்நாடு நுகர்பொருள்‌ வாணிப கழகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில்‌ ராகி அதிகமாக சாகுபடி செய்யப்பட்டுள்ள கீழ்காணும்‌ வட்டங்களில்‌ எதிர்வரும்‌ இன்று முதல்‌ ராகி சிறுதானிய நேரடி கொள்முதல்‌ நிலையம்‌ திறக்கப்பட உள்ளது.

IMG 20230112 051045

நேரடி கொள்முதல்‌ நிலையங்கள்‌ காலை 9.30 மணி முதல்‌ 1.30 மணி வரையிலும்‌ மாலை 2.30 மணிமுதல்‌ 6.30 மணி வரையிலும்‌ செயல்படும்‌. சிறு, குறு விவசாயகள்‌ தங்கள்‌ விளைநிலத்தில்‌ சாகுபடி செய்த ராகியை சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து உரிய சிட்டா, அடங்கல்‌, வங்கி கணக்கு மற்றும்‌ ஆதார்‌ எண்‌ ஒளி நகல்கள்‌ உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு ராகியை கொள்முதல்‌ நிலையங்களில்‌ விற்பனை செய்யலாம்‌. விற்பனைக்கு கொண்டுவரும்‌ ராகி சிறுதானியத்தை கல்‌, மண்‌ மற்றும்‌ தூசி போன்றவற்றை நீக்கம்‌ செய்து தரம்‌ பிரித்துக்கொண்டு வரவேண்டும்‌.

மேலும்‌, அரசு நிர்ணயம்‌ செய்த விற்பனை தொகை ராகி குவிண்டால்‌ ஒன்றுக்கு ரூ.3,578/- என்ற அடிப்படையில்‌ தங்களது வங்கி கணக்கில்‌ ஆன்லைன்‌ பணபரிவர்த்தனை மூலமாக விவசாயிகளுக்கு செலுத்தப்படும்‌.

IMG 20230112 051107

Vignesh

Next Post

கவனம்: RPF-ல் மொத்தம் 19,800 கான்ஸ்டபிள் காலி பணியிடங்கள் அறிவிப்பு...! தியாக பரவும் செய்தி... உண்மை என்ன...?

Thu Jan 12 , 2023
ரயில்வே பாதுகாப்புப் படையில் 19,800 கான்ஸ்டபிள் காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட செய்தி மற்றும் சில செய்தித்தாள்களில் வெளியான செய்தி போலியானது என்று மத்திய ரயில்வே அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் இந்த அறிவிப்பை ரயில்வே அமைச்சகம் வெளியிடவில்லை என்று தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; ரயில்வே பாதுகாப்புப் படையில் 19,800 கான்ஸ்டபிள் பதவிக்கான ஆட்சேர்ப்பு தொடர்பாக சமூக ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்களில் ஒரு கற்பனையான […]
images 2023 01 12T053238.421

You May Like