வாடிக்கையாளர் சேவைகளில் வட்டார மொழிகளை சேர்க்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்…!

RBI 11zon

வாடிக்கையாளர் சேவைகளில் வட்டார மொழிகளை சேர்க்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது.


வங்கிகளின் வாடிக்கையாளர் சேவையில் வட்டார மொழிகளைப் பயன்படுத்துவது குறித்து விரிவான வழிகாட்டுதல்களை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.பொதுத்துறை வங்கிகள் (PSBs) இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என நிதிச் சேவைகள் துறை அறிவுறுத்தியுள்ளது.

அனைத்து வங்கிகளும் கணக்கு திறக்கும் படிவங்கள், பணம் செலுத்தும் சீட்டுகள், பாஸ் புத்தகங்கள் போன்ற வாடிக்கையாளர்களுக்குத் தேவையான அனைத்து அச்சிடப்பட்ட பொருட்களையும் இந்தி, ஆங்கிலம் மற்றும் சம்பந்தப்பட்ட வட்டார மொழியில் வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது.

மேலும், கிராமப்புற மற்றும் சிறு நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்களுடன் பயனுள்ள தகவல் தொடர்பை உறுதி செய்ய, பணியாளர்கள் நியமனத்தின்போது அவர்கள் வட்டார மொழித் தேர்வில் தேர்ச்சி பெறுவதைக் கட்டாயமாக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

கார்த்திகை மாத பௌர்ணமியின் சிறப்பு..!! இந்த 3 பொருட்களை வாங்கினால் வீட்டில் செல்வம் அள்ள அள்ளக் குறையாது..!!

Wed Dec 3 , 2025
கார்த்திகை பௌர்ணமி என்பது சிவ வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாளாகும். இந்தப் புனித நாளில் சிவபெருமான், பெருமாள், முருகன், அம்பிகை, குலதெய்வம் மற்றும் செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமி ஆகிய தெய்வங்களை வழிபடப் பல மடங்கு அதிகமான பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். கிருத்திகை நட்சத்திரத்துடன் இணைந்து வரும் கார்த்திகை பௌர்ணமியில் நாம் செய்யும் வழிபாடுகள், பரிகாரங்கள் மற்றும் மங்கள காரியங்கள் அனைத்தும் பல மடங்கு பலனை திருப்பிக் கொடுக்கக் கூடிய […]
Deepam 2025

You May Like