கம்போடியாவிற்கும் தாய்லாந்திற்கும் இடையே நடந்து வரும் போர், சமீபத்திய இந்தியா-பாகிஸ்தான் மோதலை நினைவூட்டுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
இதுதொடர்பாக, ‘ட்ரூத் சோஷியலில் பதிவிட்டுள்ள அதிபர் டிரம்ப், இரு தரப்பினரும் அனைத்து விரோதங்களையும் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் தற்போதைய மோதலை முடிவுக்குக் கொண்டுவராவிட்டால், தாய்லாந்து அல்லது கம்போடியாவுடன் எந்த வர்த்தக ஒப்பந்தத்தையும் செய்ய மாட்டேன் என்று எச்சரிக்கைவிடுத்துள்ளார். கம்போடிய பிரதமர் ஹன் மானெட்டுடன் தொலைபேசியில் உரையாடியதாக டிரம்ப் கூறினார், மேலும் தாய்லாந்து பிரதமரையும் அழைத்து, ஏற்கனவே “பலரைக் கொன்ற” போரை முடிவுக்குக் கொண்டுவருமாறு இரு தரப்பினரையும் கேட்டுக்கொள்வதாகவும் கூறினார்.
நான் ஒரு சிக்கலான சூழ்நிலையை எளிமைப்படுத்த முயற்சிக்கிறேன்! இந்தப் போரில் பலர் கொல்லப்படுகிறார்கள், ஆனால் இது பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மோதலை எனக்கு நினைவூட்டுகிறது, அது வெற்றிகரமாக நிறுத்தப்பட்டது,” என்று அவர் மேலும் கூறினார்.
கம்போடியாவும் தாய்லாந்தும் பழங்கால இந்து கோவிலான பிரசாத் தா முயென் தோமைக் கட்டுப்பாட்டிற்காக ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொள்கின்றன. இந்தக் கோயில் வளாகம் கம்போடியாவின் ஒட்டார் மீன்ச்சே மாகாணத்திற்கும் தாய்லாந்தின் சுரின் மாகாணத்திற்கும் இடையில் அமைந்துள்ளது, ஆனால் இரு நாடுகளும் அதன் மீது உரிமை கோருகின்றன. பிரசாத் தா முயென் தோமை வரலாற்றுச் சிறப்புமிக்க கெமர் பேரரசின் ஒரு பகுதியாகக் கருதுகிறது, ஆனால் தாய்லாந்து அது தனது எல்லைக்குள் வருவதாகக் கூறுகிறது.
இந்த மோதலில் கம்போடியாவை சேர்ந்த 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதே நேரத்தில் தாய்லாந்தை சேர்ந்த 20 பேர் பலியாகியுள்ளனர் என்றும் அந்நாட்டினர் தெரிவிக்கின்றனர். இரு தரப்பிலும் 30 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ள நிலையில், இந்த மோதல் இப்பகுதியில் ஆயிரக்கணக்கான மக்களை இடம்பெயர செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.இதற்கிடையில், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்கு தான் பொறுப்பு என்று டிரம்ப் பலமுறை கூறி வருகிறார். இருப்பினும், இரு தரப்பினருக்கும் இடையிலான போர் நிறுத்தத்தில் டிரம்பின் பங்கை இந்தியா நிராகரித்துள்ளது.
Readmore: 3-12 ஆம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களில் “ஆபரேஷன் சிந்தூர்” இடம்பெறும்!. மத்திய அரசு அதிரடி!