தனுஷ் முதன் முதலில் ஆனந்த் எல். ராய் என்பவரின் இயக்கத்தில் ராஞ்சனா எனும் படத்தில் நடித்திருந்தார். இப்படம் மாபெரும் அளவில் வெற்றிபெற்றது. இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். அதை தொடர்ந்து மீண்டும் அதே கூட்டணியில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் அட்ராங்கி ரே. இப்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போது மீண்டும் இதே கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. ஆம், இந்தியில் தனுஷ் நடிக்கப்போகும் நான்காவது படமாக Tere Ishq Mein அமையவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஆனந்த் எல். ராய் இப்படத்தை இயக்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Post
’கையில் பணம் இல்லை... கடன் வாங்கி செலவு பண்றோம்’..!! அந்த நிலைமை வந்தால் இதுதான் எங்கள் முடிவு..!! ராஜலட்சுமி ஓபன் டாக்..!!
Wed Jun 21 , 2023
நாட்டுப்புற பாடகியும், சினிமா பின்னணி பாடகியுமான ராஜலட்சுமி செந்தில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த சுவாரஸ்யமான பேட்டியில், “எங்களோட தொழில் நிறைய சவால் நிறைந்தது. என் கணவரோட சகோதரிக்கு பிரசவ நேரம். பயங்கரமான ரிஸ்கான சூழல். தாய், சேய் இருவரையும் காப்பாற்ற முடியாத நிலை. அப்போது, எங்களுக்கு ஒரு நிகழ்ச்சி இருந்தது. நிகழ்ச்சியை ரத்து செய்ய முடியாது. குறிப்பிட்ட நேரத்தை விட ஒரு மணி நேரம் தாமதமாக வேற சென்று […]

You May Like
-
2023-07-02
வெகு விமர்சையாக நடைப்பெற்ற மாங்கனி திருவிழா!