தூள்..! அரசு தொழிற்பயிற்சியில் சேரும் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 + இலவச பஸ் பாஸ்…! உடனே விண்ணப்பிக்கவும்…!

Tn Govt 2025

திருவொற்றியூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பல்வேறு தொழில் பிரிவுகளுக்கு 14-ம் தேதி வரை நேரடி சேர்க்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து, சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்பில்; தமிழக அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும், திருவொற்றியூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் நேரடி சேர்க்கை நவம்பர்‌ 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற சேர விரும்பும் மாணவர்கள் அனைத்து சான்றிதழ்களுடன் திருவொற்றியூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்ந்து கொள்ளலாம். உற்பத்தி செயல்முறை கட்டுப்பாடு மற்றும் ஆட்டோமேஷன், தொழிற்கூடத்தில் தளவாடங்கள் ஆகிய ஓர் ஆண்டு பிரிவுகளிலும், டெக்னீசியன் மெக்கட்ரானிக்ஸ் என்ற 2 ஆண்டு தொழிற் பிரிவுக்கும் சேர்க்கை நடைபெற உள்ளது.

பயிற்சி முடிந்தவுடன், வளாக நேர்காணல் நடத்தி தொழில் நிறுவனத்தில் 100 சதவீதம் வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும். மாதம் ரூ.750 உதவித் தொகை, தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் ஆண்களுக்கும், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பெண்களுக்கும் மாதம் ரூ.1,000, பாடப் புத்தகங்கள், வரைப்பட கருவிகள், 2 செட் சீருடைகள், பேருந்து பாஸ் ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.

பயிற்சியில் சேருபவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் கிடையாது. நேரடி சேர்க்கைக்கு முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், திருவொற்றியூர், சென்னை -19, குமரன் நகர், இரண்டாவது தெரு என்று முகவரியில் நேரில் தொடர்பு கொள்ளலாம். மேலும், 95668 91187, 99403 72875, 89460 17811, 81108 45311 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

இன்று கார்த்திகை பூர்ணிமா 2025!. இந்த 5 பொருட்களை தானம் செய்தால் எல்லையற்ற பலன்கள் கிடைக்கும்!. இந்த தவறை செய்யாதீர்கள்!

Wed Nov 5 , 2025
கார்த்திகை பூர்ணிமா இந்து மதத்தில் மிகவும் புனிதமான நாளாகும், இதில் ஸ்நானம், தானம், வழிபாடு, விரதம் மற்றும் விளக்கு ஏற்றுதல் ஆகியவை சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த நாளில் சில விஷயங்களைத் தவிர்க்க வேண்டும். கார்த்திகை மாதம் இந்து மதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், மங்களகரமானதாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் பல முக்கியமான விரதங்களும் பண்டிகைகளும் வருகின்றன, மேலும் விஷ்ணு தனது நான்கு மாத யோக நித்திரையிலிருந்து விழித்தெழுந்து, மங்களகரமான […]
kartik purnima

You May Like