போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வூதியர் பணப்பலன் வழங்க ரூ.1,137 கோடி…!

TN Bus 2025

ஓய்வூதியர் பணப்பலன் வழங்குவதற்காக ரூ.1,137 கோடியை போக்குவரத்துக் கழகங்களுக்கு தற்காலிக முன்பணமாக (கடன்) தமிழக அரசு வழங்கியுள்ளது.


இதுதொடர்பாக போக்குவரத்துத் துறைச் செயலர் சுன்சோங்கம் ஜடக்சிரு பிறப்பித்த உத்தரவில்: போக்குவரத்துக் கழகங்களில் கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை முதல் நடப்பாண்டு ஜனவரி வரை ஓய்வு, விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கும், பணிக்காலத்தில் மரணமடைந்தவர்களுக்கும் பணப்பலன் வழங்கும் வகையில் நிதியுதவி கோரி போக்குவரத்துத் துறைத் தலைவர் கடிதம் அனுப்பியிருந்தார். இதை பரிசீலித்த அரசு, ரூ.1,137.97 கோடியை தற்காலிக முன்பணமாக (கடன்) போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கி ஆணையிடுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றால், பிற அரசுத்துறை ஊழியர்களைப் போல ஓய்வுபெறும் நாளில் பணப்பலன் வழங்கப்படுவதில்லை. அதன்படி, போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு தற்போது வரை பணப்பலன் வழங்கப்படவில்லை. இதனால் சிஐடியு சார்பில் நேற்று முன்தினம் மாநிலம் தழுவிய அளவில் தொடர் காத்திருப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பணப்பலன் வழங்குவது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி...! மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்...!

Wed Aug 20 , 2025
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு குஜராத் வடக்கு கேரளா பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடகிழக்கு-தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 26-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது […]
rain 1

You May Like