தமிழக அரசின் இலக்கியத் திறனறி தேர்வுக்கு செப்டம்பர் 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ் மொழி இலக்கியத் திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து விதமான பள்ளிகளிலும் (சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உட்பட) 11-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மாதந்தோறும் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும். இதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து தேர்வுத்துறை இயக்குநரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; தமிழ் மொழி இலக்கியத் திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து விதமான பள்ளிகளிலும் (சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உட்பட) 11-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மாதந்தோறும் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும்.
நடப்பாண்டுக்கான திறனறித் தேர்வு அக்டோபர் 11-ல் நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தேர்வுக் கட்டணம் ரூ.50 சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியரிடம் செப்டம்பர் 4-ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.