விதிமீறல்களில் ஈடுபட்ட 1,223 பேருந்துகளுக்கு ரூ.18,76,700 அபராதம்…! அதிகாரிகள் நடவடிக்கை…!

விதிமீறலில் ஈடுபட்ட 8 பேருந்துகளை பறிமுதல் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் சென்னையிலிருந்து பல லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா..? முறையாக வரி செலுத்தப்பட்டு பேருந்துகள் இயக்கப்படுகிறதா என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கடந்த 4 தினங்களாக ஆய்வு நடத்தினார்கள். விதிமீறலில் ஈடுபட்ட 8 பேருந்துகளை பறிமுதல் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இயக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளில், கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பான விதிமீறல்களில் ஈடுபட்ட 1,223 பேருந்துகளுக்கு ரூ.18,76,700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முறையாக வரி செலுத்தாத ஆம்னி உரிமையாளர்களிடம் இருந்து ரூ11,25,180 வரி வசூல் செய்யப்பட்டது. விதிமீறலில் ஈடுபட்ட 8 பேருந்துகளை பறிமுதல் செய்ததாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Vignesh

Next Post

அடுத்த 24 மணி நேரத்தில்..!! உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி..!! கனமழை எச்சரிக்கை..!!

Mon Nov 13 , 2023
அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தாய்லாந்து வளைகுடாவில் உள்ள சூறாவளி சுழற்சி இப்போது தெற்கு அந்தமான் கடல் மீது உள்ளதாகவும் இது தென்மேற்கு நோக்கி சாய்ந்து மத்திய வெப்பமண்டல நிலைகள் வரை நீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி […]

You May Like