“நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் ரூ.25,000 ஊக்கத்தொகை…! விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…!

money tn govt 2025

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை ரூ.25,000 பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்ட போட்டித் தேர்வு பிரிவு, மத்திய அரசின் போட்டித் தேர்வுகளை எளிதாக அணுக, தமிழக இளைஞர்களுக்கு பல்வேறு பயிற்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், அகில இந்திய குடிமை பணி தேர்வு மையத்துடன் இணைந்து, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குடிமை பணிகள் (சிவில் சர்வீசஸ்) தேர்வுக்காக பயின்று வரும் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் வசதிகளை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று 2023-24-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.


இந்த திட்டத்தின்கீழ் ஆண்டுதோறும் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயின்று வரும் 1,000 மாணவர்கள், மதிப்பீட்டு தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். முதல்நிலை தேர்வுக்கு தயாராவதற்கு, ஒவ்வொரு மாணவருக்கும் 10 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்கப்படுகிறது. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு ரூ.25,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. அந்த வகையில், 2025 சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் முதன்மை தேர்வுக்கு பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் கீழ் இயங்கிவரும் ‘நான் முதல்வன்’ போட்டித் தேர்வுகள் பிரிவு மூலமாக அவர்களது வங்கி கணக்கில் ரூ.25,000 நேரடியாக செலுத்தப்படும்.

ஊக்கத்தொகையை பெற, இந்த ஆண்டு சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்கள் https://portal.naanmudhalvan.tn.gov.in/upsc_registration என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஜூலை 2-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்தது. இதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் ஜூலை 13-ம் தேதி வரை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பு செய்துள்ளது தமிழக அரசு.

Read more: 37 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்படவுள்ள பிரமாண்டமான கதவுகள்..! களைகட்டும் திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழா…

Vignesh

Next Post

பிரம்மோஸை விட வேகம்; ஆபத்தானது! 8000 கிமீ தூரம் சென்று தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை உருவாக்கிய இந்தியா!. விரைவில் சோதனை!.

Tue Jul 1 , 2025
வரவிருக்கும் S-5 அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலுக்காக வடிவமைக்கப்பட்ட 8,000 கிமீ தூரம் மற்றும் MIRV திறன் கொண்ட அதிநவீன ஏவுகணையான K-6 ஹைப்பர்சோனிக் SLBM இன் கடல் சோதனைகளை இந்தியா நடத்த உள்ளது. DRDO ஆல் உருவாக்கப்பட்ட இது, இந்தியாவின் மூலோபாய மற்றும் பாதுகாப்பு தன்னிறைவில் ஒரு முக்கிய படியைக் குறிக்கிறது. இஸ்ரேல்-ஈரான் போரின் போது, ​​நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் டோமாஹாக் ஏவுகணை மற்றும் B-2 குண்டுவீச்சு விமானம் […]
K 6 hypersonic missile 11zon

You May Like