சபரிமலை தரிசனம்: முன்பதிவு இல்லாத பக்தர்களுக்கு தேவஸ்வம் போர்டு முக்கிய அறிவிப்பு..!

dailythanthi2F2026 11 152F1lubvmoh2Fsabarimalai

கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜையை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது. தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக சபரிமலைக்கு வருகின்றனர்.


இந்த நிலையில், சபரிமலைக்கு வரும் பக்தர்கள் மற்றும் தரிசன முன்பதிவு தொடர்பாக தேவஸ்வம் போர்டு தலைவர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதன்படி, சபரிமலைக்கு தரிசனம் செய்ய வரும் எந்தவொரு பக்தரையும் முன்பதிவு இல்லை என்பதற்காக திருப்பி அனுப்ப மாட்டோம் என்று தேவஸ்வம் போர்டு தலைவர் தெரிவித்துள்ளார். ஐயப்பனை தரிசிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வரும் பக்தர்களுக்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

இதற்கிடையே, சபரிமலை தரிசனத்திற்கான வெர்ச்சுவல் கியூ முன்பதிவு முறையிலும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வெர்ச்சுவல் கியூ மூலம் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை பக்தர்கள் ரத்து செய்யும்போது, அந்த டிக்கெட்டுகள் உடனடியாக மற்றவர்களின் முன்பதிவுக்கு கிடைக்காது.ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகள் மீண்டும் முன்பதிவு செய்யும் வசதிக்கு வருவதற்கு 8 மணி நேரம் காத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை நவம்பர் 24 முதல் அமலுக்கு வந்துள்ளது.

சபரிமலையில் பக்தர்களின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், முன்பதிவு முறையை சீராக நிர்வகிக்கவும் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.மேலும், ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்கள் ஏதேனும் ஒரு முறையில் முன்பதிவு செய்திருப்பது அவசியம் என்றும் தேவஸ்வம் போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsnation_Admin

Next Post

பிள்ளைகள் இருந்தும் அனாதையான தாய்: இறுதிச் சடங்கு செய்ய மறுத்த வாரிசுகளால் சோகம்

Wed Nov 25 , 2026
தெலங்கானா மாநிலத்தில் பிள்ளைகள் இருந்தும் அனாதையாக உயிரிழந்த தாய்க்கு இறுதிச் சடங்கு செய்ய வாரிசுகள் மறுத்த நிலையில், கிராம மக்களே ஒன்றிணைந்து இறுதி யாத்திரை செய்து மனிதநேயத்தை வெளிப்படுத்திய நெகிழ்ச்சி சம்பவம்.
death

You May Like