காலாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு…!

school student

காலாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன.


தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு மற்றும் முதல் பருவத் தேர்வு கடந்த செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை நடைபெற்றது. தொடர்ந்து மாணவர்களுக்கு செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 5-ம் தேதி வரை தொடர் விடுமுறை வழங்கப்பட்டது. இந்நிலையில், விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் இன்று திறக்கப்படுகின்றன. தொடர் விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படுவதால் வளாகங்களில் தூய்மைப் பணிகள் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

முதல் நாளிலேயே 1 முதல் 7-ம் வகுப்பு வரை பயிலும் 32 லட்சத்து 60,960 மாணவர்களுக்கு 2-ம் பருவத்துக்கான பாடநூல்கள் வழங்கப்பட உள்ளன. மேலும், மதிப்பீடு செய்யப்பட்ட மாணவர்களின் காலாண்டுத் தேர்வு விடைத்தாள்களை விநியோகிக்க வேண்டும் என்றும், பருவமழையை முன்னிட்டு பள்ளிகளில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்றும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

தொடர் கனமழை, வெள்ளப்பெருக்கு..!! தத்தளிக்கும் நேபாளம்..!! பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு..!!

Mon Oct 6 , 2025
அண்டை நாடான நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் கடுமையான நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இந்த திடீர் இயற்கை பேரிடரில் சிக்கி இதுவரை 47 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பல சாலைகள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதால், நாட்டின் முக்கியப் பகுதிகளில் போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள கிழக்கு மாவட்டமான இலாம் […]
Nepal 2025

You May Like