விளையாட்டு பிரியர்களே உஷார்.. DREAM -11 செயலி மூலம் நூதன மோசடி! – ஆட்சியரிடம் பரபரப்பு புகார்!

DREAM -11 ஆப் மூலமாக அந்நிறுவனத்தின் ஆட்களை பயன்படுத்தி அதிக பரிசுகளை பெறவைத்து மோசடி நடந்துள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் போட்டிகள் தொடங்கி சர்வதேச கிரிக்கெட் போட்டிகள், கபடி லீக், புட்பால் லீக் வரை அனைத்துவகை போட்டிகளின் போதும் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் பல்வேறு மொபைல் செயலிகள் அறிமுகப்படுத்துகின்றன. அந்த வகையில், ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் கடந்த சில ஆண்டுகளாக ஐ.பி.எல்.ஐ குறிவைத்து பல்வேறு மொபைல் ஆஃப் மூலமாக விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

பணத்தை பெற்றுக்கொண்டு போட்டி நடத்தப்படும் நிலையில், இதில் வெற்றி பெறும் நபர்களுக்கு அதிக பரிசுத் தொகையும் வழங்கப்படுகிறது. இதில் விளையாட தொடங்கும்போதே ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் பெறப்படுகிறது. இந்த ஆஃப்களுக்கு பிரபல கிரிக்கெட் வீரர்களும், சினிமா நடிகர்களும் விளம்பரம் செய்து வருகின்றனர்.

அப்படியான ஒரு செயலிதான் ட்ரீம் 11. இச்செயலியில் மொத்த போட்டியாளர்கள், குழு போட்டியாளர்கள், தனித் தனி போட்டியாளர்கள் என பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்படும். ஒவ்வொன்றுக்கும் அதற்கேற்ப அவர்கள் பணம் கட்ட வேண்டியிருக்கும். இதில் ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த 11 வீரர்களை தேர்வு செய்து பணம் கட்டினால், அன்றைய போட்டியில், பணம் கட்டி தேர்வு செய்த விளையாட்டு வீரர்கள் எடுக்கும், ஒவ்வொரு ரன், கேட்ச், விக்கெட்டுக்கும் ஸ்கோர் வழங்கப்படும். இதன் அடிப்படையில் போட்டி முடிவடைந்த பின்னர் மொபைல் ஆஃப் மூலமாக வெற்றியாளர்கள் பட்டியல் வெளியாகும். இந்த போட்டிகளில் 20 ரூபாய் தொடங்கி 5 லட்சம் வரை பணம் செலுத்தி விளையாடலாம்.

இதுபோன்ற விளையாட்டுகளில் பிரபல மொபைல் செயலியான DREAM -11 மீது, பயனாளிகளை ஏமாற்றி மோசடி செய்வதாக புகார் எழுந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டியை சேர்ந்த கல்யாண் குமார் என்பவர் மாநில டிஜிபியிடம் ட்ரீம்-11 செயலி மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ட்ரீம்-11 செயலியில் ஒரே பெயர்களில் ஏராளமான நபர்கள் போட்டிகளில் கலந்து கொள்வது போன்று மோசடி நடைபெறுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக அந்நிறுவனத்தை சேர்ந்த 200 பேர் போட்டியாளர்கள் போன்று கலந்து கொண்டு, மோசடி செய்வதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அந்நிறுவனத்தை சேர்ந்த நபர்களுக்கு முதல் பரிசை வழங்கி, கோடிக்கணக்கான ரூபாயை மக்களிடம் ஏமாற்றி வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. எனவே, ட்ரீம்-11 செயலி மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்யாண் குமார் வலியுறுத்தியுள்ளார்.

Next Post

’இந்த தவறை நீங்களும் செய்யாதீங்க’..!! இயற்கையான முறையிலும் உடல் எடையை குறைக்கலாம்..!! டிப்ஸ் இதோ..!!

Fri Apr 26 , 2024
உலகம் முழுவதுமே மாறி வரும் பழக்க வழக்கங்கள் மற்றும் உடற்பயிற்சியின்மை காரணமாக உடல் பருமன் பிரச்சனை அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதுமே 100 கோடி பேருக்கு அதிகமானோர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் கலோரி குறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு போன்றவற்றை பின்பற்றினால், உடல் எடையை உடனே குறைக்க முடியாவிட்டாலும், மாரடைப்பு அபாயத்தை குறைக்க முடியும் […]

You May Like