fbpx

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு இராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் …

கடந்த 2022 – 23ஆம் நிதியாண்டுக்கான தேசிய கட்சிகளின் ஆண்டு வருவாய் 3,077 கோடி ரூபாய் என தெரியவந்துள்ளது. இதில், அதிகபட்சமாக பாஜகவுக்கு 2,361 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது என ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. தேசிய கட்சிகள் ஆண்டுதோறும் தலைமை தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பிக்கும் வருவாய், செலவினங்கள் தொடர்பான …

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான தேர்தல் தேதி அறிவிப்பு வரும் மார்ச் மாதத்தில் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய …

தமிழ்நாட்டில் இன்று முதல் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஒவ்வொரு நாளும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பல நகரங்களிலும் 100 டிகிரியை தாண்டி வெப்பம் …

ADHAAR: ஆதார் அட்டை இல்லாமலும் வாக்களிக்கலாம் என தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத் தேர்தல் வருவதை முன்னிட்டு மேற்கு பங்காள மாநிலத்தில் பெரும்பாலான சிறுபான்மையினர் மற்றும் எஸ்.சி எஸ்.டி சமூகத்தைச் சார்ந்தவர்களின் ஆதார் அட்டைகளை மத்திய அரசு முடக்கி இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி இருந்தார்.

பாராளுமன்றத் …

சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு ஒரு வார காலமாக தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களின் நிலையை கருத்தில் கொண்டு மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் ஆசிரியர்களுக்கு அன்பான வேண்டுகோள். விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் தனது செய்தி குறிப்பில்; கடந்த ஒரு வார காலமாக தங்களின் கோரிக்கையினை நிறைவேற்றிட தொடர் ஆர்ப்பாட்டம் …

PM MODI: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி(NDA) பீகார் மாநிலத்தில் 35 தொகுதிகளிலும் இமாச்சலப் பிரதேசத்தில் 4 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கருத்துக் கணிப்பு வெளியாகி இருக்கிறது

2024 ஆம் வருடத்திற்கான பாராளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் சிஎன்ஓஎக்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக …

“வேறொரு இடத்தில் இருப்பது போன்ற எந்த உணர்வும் இல்லை. என் சொந்த இடத்தில் இருப்பது போன்ற உணர்வுதான் உள்ளது” என்று பாஜகவில் சேர்ந்தது குறித்து நெகிழ்ந்துள்ளார் முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் இன்று (பிப்.28) பிரதமர் மோடி தலைமையில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி முதல்முறையாக …

பிரபல சின்னத்திரை மற்றும் நாடக நடிகரான அடடே மனோகர் காலமானார்.

சென்னையைச் சேர்ந்த மனோகர் சிறு வயது முதலே நாடகங்கள் மற்றும் சினிமா மீது ஆர்வம் கொண்டிருந்தார். இதன் காரணமாக, தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய அவர், பணிகளுக்கிடையே நாடகங்களிலும் நடித்து வந்தார். சுமார் 3,500-க்கும் மேற்பட்ட முறை மேடை நாடகங்களில் நடித்துள்ளார். அதில் 6 …

crime: விழுப்புரம் மாவட்டம் காகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கதிர்வேல். இவரது தம்பி பாரதி. கதிர்வேல் டைல்ஸ் போடும் செய்து வந்தார். அண்ணன் மற்றும் தம்பி இருவருக்கும் திருமணமான நிலையில் தங்களது குடும்பத்துடன் வசித்து வந்தனர். இந்நிலையில் பாரதியின் மனைவி புஷ்பா வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த …