தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதன்படி, தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் கூட்டணியாக இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளன.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்க்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். அந்த வகையில் திமுக சார்பில் “ஓரணியில் தமிழ்நாடு” என்ற இயக்கத்தின் மூலமாக கட்சி நிர்வாகிகள் புதிய உறுப்பினர்களை சேர்த்து வருகின்றனர். மற்ற கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளை திமுகவில் இணைக்கும் பணியை செந்தில் பாலாஜிக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார்.
இதே போல அதிமுகவும் தங்களது கட்சியை பலப்படுத்த தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார். கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் நடந்த இணைப்பு விழாவில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.
அதிமுகவும் திமுகவும் மாற்றுக் கட்சியினரை இணைக்கும் பணியில் ஈடுபட்டு வர நேற்று 500க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்த நிலையில் இரவில் 300க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்துள்ளனர். அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். கொங்கு மண்டலத்தில் அதிக இடங்களை கைப்பற்றும் நோக்கத்தில் இணைப்பு விழா நடைபெறுகிறது.
Read more: வங்கிகளில் லோன் வாங்குவோருக்கு செம குட் நியூஸ்..!! இனி சிபில் ஸ்கோர் கிடையாது..!! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!!