சினிமா ரசிகர்களுக்கு ஷாக்! செப்டம்பர் 1 முதல் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை!

WhatsApp Image 2026 08 22 at 4.39.45 PM

தமிழ் திரையுலகில் திரையரங்கு வெளியீடு மற்றும் ஓடிடி ரிலீஸ் இடையிலான இடைவெளி தொடர்பான பிரச்சினை தற்போது தீவிரமடைந்துள்ளது. தயாரிப்பாளர்களின் வருவாய், திரையரங்குகளின் நலன், ஓடிடி நிறுவனங்களின் ஒப்பந்தம் என பல்வேறு தரப்புகளின் எதிர்பார்ப்புகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக, புதிய படங்களின் வெளியீட்டை தற்காலிகமாக நிறுத்த தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.


தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடப்பு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் புதிய திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிட வேண்டாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், தற்போது இடைக்கால படப்பிடிப்பில் இருக்கும் திரைப்படங்களின் பணிகளையும் நிறுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்சினையின் முக்கிய காரணமாக இருப்பது ஓடிடி வெளியீட்டுக்கான 8 வார காலக்கெடு. திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களை குறைந்தது 8 வாரங்கள் கழித்தே ஓடிடி தளங்களில் வெளியிட வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

திரையரங்குகளில் ஒரு படம் வெளியான உடனேயே ஓடிடியில் வந்துவிட்டால், திரையரங்கு வருவாய் பாதிக்கப்படும் என்பது அவர்களின் வாதமாக உள்ளது. இதனால், 8 வார கால இடைவெளியை உறுதி செய்யும் வகையில் தயாரிப்பாளர்களிடமிருந்து ஒப்புதல் கடிதம் பெற்ற பின்னரே படங்களை வெளியிடுவது என்ற நிலைப்பாட்டை அவர்கள் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், இதுபோன்ற விதிமுறைகளை தயாரிப்பாளர்களுடன் போதிய ஆலோசனை இல்லாமல் கொண்டு வருவதை தயாரிப்பாளர் சங்கங்கள் எதிர்த்துள்ளன. குறிப்பாக, திரைப்படம் வெளியான சில வாரங்களிலேயே ஓடிடி நிறுவனங்களிடம் இருந்து கிடைக்கும் தொகை பல தயாரிப்பாளர்களுக்கு முக்கியமான வருவாய் ஆதாரமாக இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழில் ஆண்டுக்கு 250-க்கும் அதிகமான படங்கள் வெளியானாலும், அவற்றில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான திரைப்படங்களே வசூலில் வெற்றி பெறுகின்றன. பெரும்பாலான படங்கள் எதிர்பார்த்த வருவாயை ஈட்டாததால், தயாரிப்பாளர்களுக்கு பெரும் நிதிச்சுமை ஏற்படுகிறது. இந்த நிலையில், ஓடிடி ஒப்பந்தங்களின் மூலம் முதலீட்டை ஓரளவு மீட்டெடுப்பது தயாரிப்பாளர்களுக்கு முக்கியமானதாக உள்ளது.

இதனால், 8 வார ஓடிடி விதிமுறையை ஏற்க மறுத்துள்ள தயாரிப்பாளர்கள், தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் செப்டம்பர் 1 முதல் புதிய படங்களின் திரையரங்கு வெளியீட்டை நிறுத்த முடிவு செய்துள்ளனர். இதன் காரணமாக தமிழ் சினிமாவில் புதிய படங்களின் வெளியீடு மற்றும் படப்பிடிப்பு பணிகளில் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

Also Read: ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டம்: டெண்டரில் குறைந்த விலை கூறிய ஜாய் ஆலுக்காஸ்; 70% பணி ஆணை!

Saranya

Next Post

20 வயது மாணவியின் கையைப் பிடித்து இழுத்து... 60 வயது முதியவர் செய்த காரியம்!

Sat Aug 22 , 2026
வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசிக்கும் பெண்களின் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்து வரும் நிலையில், பெங்களூருவில் வீட்டு உரிமையாளரே 20 வயது கல்லூரி மாணவியிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக எழுந்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் 60 வயது வீட்டு உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூரு சாந்திநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 20 வயது மாணவி […]
work from home 2

You May Like