Breaking : முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் சித்தராமையா..! புதிய முதல்வராகும் டி.கே.சிவக்குமார்..! எப்போது பதவியேற்பு..?

siddharamaiaah dk shivkumar

கர்நாடக மாநிலத்தில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை உடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.. ஆட்சி அமையும் போது முதலமைச்சர் யார் என்பதில் சித்தராமையா, டி.கே சிவகுமாருக்கு கடும் போட்டி நிலவியது.. இதனையடுத்து கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் டி.கே. சிவக்குமாரும் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவியைப் பகிர்ந்துகொள்வார்கள் என்று கூறப்பட்டது..


இதையடுத்து கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் பதவி வகித்து வருகின்றனர்.. எனினும் 2.5 ஆண்டுகள் ஆன பிறகு, டி.கே.சிவகுமார் முதல்வராக வேண்டும் என்று அவரின் ஆதரவாளர்கள் குரல் கொடுத்து வந்தனர்.. இது காங்கிரஸ் கட்சிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியது..

இந்த சூழலில் கர்நாடக அரசியல் தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் ஆலோசனை நடத்தியது.. காங்கிரஸ் தலைமை ராஜினாமா செய்யுமாறு கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பதவியை ராஜினாமா செய்வார் என்று கூறப்பட்டது..

இந்த நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.. ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநரை சந்தித்த அவர் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.. துணை முதல்வர் டி.கே. சிவக்குமாருக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்கும் அவரை சித்தராமையா இன்று தனது பதவியில் இருந்து விலகினார்.. இதையடுத்து டி.கே சிவக்குமார் நாளை கர்நாடக முதல்வராக பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்றைக்குள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது..

முன்னதாக இன்று காலை பெங்களூருவில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில், தனது அமைச்சரவை சகாக்களுக்கு முதல்வர் சித்தராமையா காலை விருந்து அளித்தார். தற்போதைய துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் மற்றும் பிற அமைச்சரவை சகாக்கள் இந்த காலை விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இந்த காலை விருந்து நிகழ்ச்சியின்போது, ​​கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும், துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமாரும் ஒருவரையொருவர் ஆரத்தழுவிக்கொண்டனர். துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் பாதங்களைத் தொட்டு வணங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது..

Read More : தவெகவில் இணைகிறேனா..? இறுதி முடிவு இதுதான்..! முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பரபரப்பு பேட்டி..!

English Summary

Karnataka Chief Minister Siddaramaiah has resigned from his post.

RUPA

Next Post

இந்த கொடூரம் உங்கள் மனதை உறுத்தவில்லையா..? இதுக்கெல்லம் என்ன பதில் சொல்லப்போறீங்க.. விஜய் அரசை விளாசிய இபிஎஸ்..!

Thu May 28 , 2026
Edappadi Palaniswami has severely criticized the Vijay-led TVK government regarding the incident in Chennai where a police constable sexually harassed a young boy.
vijay eps

You May Like