பெண்களின் கனவுகளுக்கு சிறகுகள் – சிங்கப்பெண் கடன் திட்டம்!
பெண்கள் பொருளாதார ரீதியாகத் தன்னிறைவு பெறவும், சொந்தமாகத் தொழில் தொடங்கி முன்னேறவும் தமிழக கூட்டுறவுத்துறை சார்பில் ‘சிங்கப்பெண் கடன்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் கடனுதவி பெற விரும்பும் பெண்களுக்கு அமைச்சர் வ.காந்திராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.
பெண்கள் அதிக வட்டிக்குக் கடன் வாங்கும் சூழலைத் தவிர்த்து, கூட்டுறவு வங்கிகள் மூலம் கடனுதவி பெற்று தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
யாரெல்லாம் இந்தக் கடன் பெறலாம்?
‘சிங்கப்பெண் கடன்’ திட்டத்தின் கீழ் பின்வரும் பிரிவுகளைச் சேர்ந்த பெண்கள் கடனுதவி பெறலாம்.
- மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள்.
- கணவரை இழந்த பெண்கள்.
- கணவரால் கைவிடப்பட்ட பெண்கள்.
- சொந்தமாகத் தொழில் செய்து வரும் பெண் தொழில்முனைவோர்.
- பணிக்குச் செல்லும் பெண்கள்.
புதிதாகத் தொழில் தொடங்க விரும்புபவர்களும், ஏற்கெனவே நடத்தி வரும் தொழிலை விரிவுபடுத்த நினைப்பவர்களும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.
41,369 பெண்களுக்கு ரூ.3,428 கோடி கடன்!
இந்தத் திட்டத்தின் செயல்பாடு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, 2026 நவம்பர் மாதம் வரை மொத்தம் 41,369 பயனாளிகளுக்கு ரூ.3,428.49 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
இதில் பல்வேறு கூட்டுறவு அமைப்புகள் மூலமாக வழங்கப்பட்ட கடன் விவரங்கள்:
கூட்டுறவு அமைப்பு பயனாளிகள் கடன் தொகை
தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள் 22,972 ரூ.1,773.37 கோடி,மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் 13,344 ரூ.1,432.02 கோடி,நகரக் கூட்டுறவு வங்கிகள் 973 ரூ.96.56 கோடி,நகரக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் 641 ரூ.69.43 கோடி,மலைவாழ் மக்கள் கூட்டுறவு சங்கங்கள் 3,154 ரூ.29.50 கோடி,
மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி 285 ரூ.27.60 கோடி,
எப்படி விண்ணப்பிப்பது?
இந்தத் திட்டத்தின் கீழ் கடனுதவி பெற விரும்பும் பெண்கள் தங்களுக்கு அருகில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அல்லது தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்தை நேரில் அணுகலாம். அங்கு திட்டம் தொடர்பான விவரங்களைப் பெற்று, தேவையான ஆவணங்களுடன் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.மேலும் விவரங்களுக்கு:வாட்ஸ்அப் உதவி எண்: 98840 00845
பெண்களுக்கு புதிய தொழில் வாய்ப்பு!
பெண்கள் தங்களுடைய சொந்தக் காலில் நிற்கவும், குடும்ப வருமானத்தை உயர்த்தவும் உதவும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எனவே, சுயதொழில் தொடங்கத் திட்டமிடும் பெண்கள் அருகிலுள்ள கூட்டுறவு வங்கிகளை அணுகி இத்திட்டம் குறித்த முழுமையான விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
Also read:பயத்தில் பிறந்ததா மதம்..? கடவுளையே கேள்விக்குள்ளாக்கிய கிருத்திகா உதயநிதி..!


