பயத்தில் பிறந்ததா மதம்..? கடவுளையே கேள்விக்குள்ளாக்கிய கிருத்திகா உதயநிதி..!

krithika udhayanithi

மதம், கடவுள் நம்பிக்கை மற்றும் வழிபாட்டு முறைகள் குறித்துஇயக்குநரும் ,எதிர்க் கட்சி தலைவரின் மனைவியுமான கிருத்திகா உதயநிதி தனது எக்ஸ் தலபக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்து சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.


பயத்திலிருந்து பிறந்ததா மதம்?

மனிதர்கள் பூமி தட்டையானது என்று நம்பிய காலத்திலும், பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்ணுயிரிகள் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதை அறியாத காலத்திலும் மதம் உருவானதாக கிருத்திகா உதயநிதி தெரிவித்துள்ளார். அந்தக் காலத்தில் இயற்கையின் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் நோய்களுக்கான காரணங்களைப் புரிந்துகொள்ள முடியாததால், அச்சத்தின் காரணமாகவே மனிதர்கள் இறைவனை வேண்டிப் பிரார்த்தனை செய்ததாக அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அறிவியல் வளர்ந்து தொடரும் சடங்கு விவாதங்கள்!

தற்போது அறிவியல் வளர்ச்சியால் மனிதர்களுக்கு பல்வேறு உண்மைகள் தெரியவந்துள்ளன. இருப்பினும், இன்றைய கால அர்த்தமற்றதாகக் கருதப்படும் சில சடங்குகள் குறித்து நீதிமன்றங்களிலும் அறிவார்ந்த தளங்களிலும் விவாதங்கள் நடைபெறுவது வியப்பளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடவுள் இல்லை என வாதிடும் கிருத்திகா உதயநிதி!

மேலும், மனிதர்களின் விசித்திரமான இருப்பே கடவுள் இல்லை என்பதற்கான வாதமாக அமையும் என தான் கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குரங்கில் இருந்து பரிணாம வளர்ச்சி பெற்ற மனித மூளையில் ஏற்பட்ட குறைபாடுகளின் காரணமாகவே மனிதர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்கிறோம், தேவையற்ற விவாதங்களில் ஈடுபட்டுக் கொண்டு இருப்பதாக தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Also read:அமித்ஷாவை தொடர்ந்து கார்கேவையும் சந்தித்த கனிமொழி..! டெல்லியில் நடக்கும் அரசியல் காய் நகர்த்தல் என்ன..?

Newsnation_Admin

Next Post

பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்! ரூ.3,428 கோடி கடனுதவி... 41 ஆயிரம் பேருக்கு கிடைத்த சூப்பர் வாய்ப்பு!

Sun Nov 29 , 2026
பெண்களின் கனவுகளுக்கு சிறகுகள் – சிங்கப்பெண் கடன் திட்டம்!பெண்கள் பொருளாதார ரீதியாகத் தன்னிறைவு பெறவும், சொந்தமாகத் தொழில் தொடங்கி முன்னேறவும் தமிழக கூட்டுறவுத்துறை சார்பில் ‘சிங்கப்பெண் கடன்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் கடனுதவி பெற விரும்பும் பெண்களுக்கு அமைச்சர் வ.காந்திராஜ் அழைப்பு விடுத்துள்ளார். பெண்கள் அதிக வட்டிக்குக் கடன் வாங்கும் சூழலைத் தவிர்த்து, கூட்டுறவு வங்கிகள் மூலம் கடனுதவி பெற்று தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் […]
Magalir 2025

You May Like