எகிறி அடிக்கும் விமான டிக்கெட் விலை!. கவலையில் கேரள பயணிகள்!

Flight 2026

ஓணம் பண்டிகையை கொண்டாடச் சொந்த ஊர் செல்லும் கேரள மாநிலத்தவர்கள் வசதிக்காகச் சென்னையில் இருந்து கொச்சி, திருவனந்தபுரம் உள்ளிட்ட விமானங்களுக்குக் கூட்ட நெரிசல் அலைமோதுகிறது. வார இறுதி விடுமுறையும் பண்டிகையும் இணைந்து வருவதால் பயணிகள் பலர் ரயில்களைத் தவிர்த்து விமானப் பயணங்களை ஆர்வமுடன் மேற்கொண்டு வருகின்றனர்.


பயணிகள் வருகை திடீரென அதிகரித்துள்ளதால், சென்னை விமான நிலையத்தில் இருந்து கேரளா செல்லும் விமானங்களின் கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. வழக்கமான கட்டணங்களை விட பல மடங்கு கூடுதல் விலைக்குப் பயணிகள் டிக்கெட் வாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதாவது,  சென்னை – கொச்சி வழக்கமான கட்டணம் ரூ.5,336, இன்று ரூ.14,843ஆக உயர்ந்துள்ளது. மேலும் சென்னை- திருவனந்தபுரம் வழக்கமான கட்டணம் ரூ.5,853 இன்று ரூ.14,700ஆக உயர்ந்துள்ளது.

கட்டண உயர்வு பெரும் அதிர்ச்சியை அளித்தாலும், குடும்பத்தினருடன் பண்டிகையைக் கொண்டாடும் உற்சாகத்தில் பயணிகள் அதைப் பொருட்படுத்தாமல் பயணத்தைத் தொடர்கின்றனர். இருப்பினும், இது போன்ற பண்டிகைக் காலங்களில் கட்டணக் கொள்ளையைத் தவிர்க்கச் சென்னையில் இருந்து கூடுதல் சிறப்பு விமானங்களை இயக்க வேண்டும் என்பதே பயணிகளின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.

1newsnationuser5

Next Post

மெட்ராஸ் மெமரீஸ்... கம்பீரத்தின் மறுபெயர் சென்னை!. கிராமத்தில் தொடங்கி பெருநகரமாக மாறிய சுவாரஸியமான வரலாறு!.

Sat Aug 22 , 2026
சென்னை, தமிழ் நாட்டின் தலைநகரம். இந்தியாவின் நான்காவது பெரிய மாநகரம். 1996-ம் ஆண்டு வரை ‘மெட்ராஸ்’ என்று அழைக்கப்பட்டுவந்தது. வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த பெரிய துறைமுக நகரங்களுள் ஒன்று. இன்று, சுமார் ஒரு கோடி மக்கள் வாழும் சென்னையின் வாழ்வும், வரலாறும் ஆச்சர்யமானவை. சென்னை, பல சிறப்புகளை தன்னுள் கொண்டுள்ள நகரம். இது, மதராசப்பட்டினம், மதராஸ், சென்னப்பட்டணம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னால் மெட்ராஸ் சிறிய கிராமமாகவே இருந்தது. […]
chennai birthday 30kb

You May Like