தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் இன்று எஸ்எம்சி குழுக் கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் இயங்கிவரும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) 2024-ம் ஆண்டு மறுகட்டமைப்பு செய்யப்பட்டது. அதன்படி பெற்றோர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் கல்வியாளர்களை உள்ளடக்கிய 20 உறுப்பினர்கள் கொண்ட குழுவாக எஸ்எம்சி மாற்றி அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
பள்ளி மேலாண்மைக் குழுவின் புதிய உறுப்பினர்களை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்தக் குழுவுக்கு பெற்றோர் ஒருவர் தலைவராக இருக்க வேண்டும். தலைமை ஆசிரியர் ஒருங்கிணைப்பாளராக செயல்பட வேண்டும். அதனுடன், பெற்றோர், ஆசிரியர், உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்வியாளர், சுய உதவிக்குழு உறுப்பினர், முன்னாள் மாணவர்கள் என மொத்தம் 24 பேர் இந்தக் குழுவில் இடம்பெற்றிருப்பர்.
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) கடந்த 2024-ம் ஆண்டு மறுகட்டமைப்பு செய்யப்பட்டன. இதையடுத்து, 2024-26-ம் ஆண்டுகளுக்கான புதிய தலைவர், உறுப்பினர்கள் கொண்ட எஸ்எம்சி குழுக்களின் கூட்டம் கடந்த ஆண்டு முதல் மாதம்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த கல்வி ஆண்டின் முதல் எஸ்எம்சி குழுக் கூட்டம் கடந்த ஜூலை 25-ம் தேதி நடைபெற்றது.
இந்த மாதத்துக்கான கூட்டம் இன்று மாலை 3 முதல் 4.30 மணி வரை நடைபெற உள்ளது. இதில், பள்ளி மற்றும் மாணவர்களின் வளர்ச்சிக்கு தேவையான அம்சங்களை தீர்மானங்களாக நிறைவேற்றிக் கொள்ளலாம். திறன் இயக்கம், போக்குவரத்து வசதி, போதைப் பொருள் விழிப்புணர்வு, பள்ளி தூதுவர்கள், மணற்கேணி செயலி, இல்லம் தேடி கல்வி, கலைத் திருவிழா, இடைநிற்றல் கணக்கெடுப்பு, உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.