Tn govt: தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கண்காணிப்பை தீவிர படுத்த அரசு உத்தரவு…!

ரேஷன் அரிசி கடத்தல் விவகாரத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கண்காணிப்பை தீவிர படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

அனைவருக்கும்‌ உணவு மற்றும்‌ ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும்‌ பொருட்டு தமிழ்நாடு அரசு 7 சிறப்பு பொது விநியோகத்திட்டம்‌ மூலம்‌ அத்தியாவசியப்‌ பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக்‌கடைகள்‌ மூலம்‌ விநியோகம்‌ செய்து வருகிறது. அவ்வாறு, விநியோகம்‌ செய்யப்படும்‌ அத்தியாவசியப்‌ பண்டங்களை சிலர்‌ முறைகேடாக கள்ளச்சந்தையில்‌ விற்று அதிக லாபம்‌ ஈட்டும்‌ நோக்கத்துடன்‌ செயல்பட்டு வருகின்றனர்‌.

உணவுப்‌ பொருள்‌ வழங்கல்‌ மற்றும்‌ நுகர்வோர்‌ பாதுகாப்புத்‌ துறை அலுவலர்கள்‌ மற்றும்‌ சூடிமைப்‌ பொருள்‌ குற்றப்‌ புலனாய்வுத்‌ துறை அலுவலர்கள்‌ ஆகியோர்‌ தொடர்‌ ரோந்து பணி மேற்கொண்டு அத்தியாவசியப்‌ பண்டங்கள்‌ கடத்தல்‌மற்றும்‌ பதுக்கலில்‌ ஈடுபடுவோர்‌ / உடந்தையாக செயல்படுவோர்‌ மீதும்‌, இன்றியமையாப்‌பண்டங்கள்‌ சட்டம்‌, 1955 மற்றும்‌ தொடர்புடைய கட்டுப்பாட்டு ஆணைகளின்‌ கீழ்‌ வழக்கு பதிவுசெய்து உரிய மேல்‌ நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்‌.

இந்த நிலையில் கோவில்பட்டியில் ரேஷன் அரிசி கடத்தல் விவகாரத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கண்காணிப்பை தீவிர படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் தவறு செய்யும் ரேஷன் கடை பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

கையில் கிளாஸுடன் பர்த்டே கொண்டாடிய பிக்பாஸ் ரச்சிதா..! வைரலாகும் வீடியோ

Fri Apr 26 , 2024
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் தொடர் மூலம் அறிமுகமானவர் தான்  ரச்சிதா மகாலட்சுமி. பின்னர் சரவணன் மீனாட்சி தொடரின் இரண்டாம் பாகத்தில் நடிகர்  ரியோவுக்கு ஜோடியாக மீனாட்சி என்கிற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். பின்னர்  நாம் இருவர்  நமக்கு இருவர் தொடரில் நடித்த ரச்சிதா, அந்த தொடர் முடிந்ததும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியின்  6வது  சீசனில் ரச்சிதா  போட்டியாளராக […]

You May Like