இந்தாண்டு புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா..? திருமண தடை, கடன், நோய் பிரச்சனைகளுக்கு எளிய பரிகாரம்..!

Perumal 2025

ஆன்மீக ரீதியாகவும் ஜோதிட ரீதியாகவும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த புரட்டாசி மாதம், திருமால் வழிபாட்டிற்குரிய புனித மாதமாக போற்றப்படுகிறது. ஜாதகத்தில் சனி மற்றும் புதன் திசை நடப்பவர்கள், இந்த மாதத்தில் எள் மற்றும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி திருமாலை வழிபட்டு வந்தால், வாழ்க்கையில் நிலவும் காரிய தடைகள், பாவங்கள் நீங்கி புண்ணிய பலன்கள் வந்து சேரும் என்பது ஐதீகம்.


உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் முதற்கொண்டு, தமிழகத்தின் பல்வேறு வைணவ தலங்களிலும் வருடாந்திர பெருவிழாக்கள் புரட்டாசி மாதத்தில்தான் களைகட்டுகின்றன. திருப்பதி வெங்கடாஜலபதியை குலதெய்வமாக கொண்ட குடும்பத்தினர், தங்கள் இல்லங்களில் மாவிளக்கு ஏற்றி திருவாராதனம் செய்து நேர்த்திக்கடன்களை செலுத்துவதும் வழக்கம்.

புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனி பகவான் அவதரித்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, சனியின் வக்ர பார்வை மற்றும் கெடுபலன்களின் தாக்கத்திலிருந்து விடுபட, புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை மனமுருகி வணங்குவது சிறந்தது. மேலும், இந்த மாதம் இறைவழிபாடு மட்டுமின்றி, முன்னோர்களின் ஆசியை பெற்றுத்தரும் பித்ரு வழிபாடு மற்றும் அன்னை பராசக்தியை போற்றும் நவராத்திரி வழிபாடு என முப்பெரும் அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோவிலில் உள்ள ஸ்ரீ ரங்க நாச்சியார் தாயார் சன்னதியில் நடைபெறும் நவராத்திரி திருவிழா இக்காலகட்டத்தில் மிக விமர்சையாக கொண்டாடப்படும். அத்துடன், புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தி திதியில் சித்தி விநாயகர் விரதமிருந்து வழிபட்டால் எதிரிகளின் தொல்லைகள் அகலும் என்பதும், ஆன்மீக ஜோதியான வடலூர் வள்ளலார் அவதரித்ததும் இம்மாதத்தில்தான் என்பதும் தனிச்சிறப்பாகும்.

இறை வழிபாட்டிற்கும் தியானத்திற்கும் மட்டுமே முழுமையாக உகந்த மாதம் என்பதால், புரட்டாசி மாதத்தில் புதிய வீடு கட்டும் பணிகளை தொடங்குவது உடல்நலனை பாதிக்கக்கூடும் என வாஸ்து சாஸ்திர குறிப்புகள் தெரிவிக்கின்றன. அதேசமயம், கல்வி தடை, திருமண தடை, தீராத நோய் மற்றும் தீவிர நிதி நெருக்கடிகளால் தவித்து வருபவர்கள், புரட்டாசி மாத திருவோண நட்சத்திர நாளில் பெருமாளுக்கு சிறப்பு அர்ச்சனைகள் மற்றும் வழிபாடுகளை மேற்கொள்வதன் மூலம் அனைத்து இன்னல்களிலிருந்தும் விடுபட்டு மன அமைதியையும் நல்வாழ்வையும் பெறலாம்.

Read More : வடகிழக்கு பருவமழை..!! முதல்வர் விஜய் அவசர ஆலோசனை..!! மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு..!!

Next Post

வறுமையை விரட்டி செல்வத்தை பெருக்கும் கந்தர் அநுபூதி..! அருணகிரிநாதர் அருளிய பாடலின் மகிமை..!

Tue Sep 22 , 2026
முருகப்பெருமானின் தீவிர பக்தரான அருணகிரிநாத சுவாமிகள் அருளிச்செய்த கந்தர் அநுபூதி பாடல்கள், மனித வாழ்க்கையில் எதிர்கொள்ளும் எத்தகைய துன்ப துயரங்களையும் அடியோடு தகர்க்கும் அற்புத ஆன்மீக பொக்கிஷமாக போற்றப்படுகிறது. குறிப்பாக, குடும்பத்தை வாட்டி வதைக்கும் கடுமையான நிதி நெருக்கடிகள், தீராத கடன்கள் மற்றும் வறுமையின் கோரப்பிடியிலிருந்து விடுபடுவதற்கு கந்தர் அநுபூதியின் 19-வது பாடல் ஒரு கண்கண்ட நிவாரணமாக திகழ்கிறது. “வடிவும் தனமும் மனமும் குணமும், குடியும் குலமும் குடிபோ கியவா, […]
Murugan 2026

You May Like