வடகொரியாவில் சினிமா பாடலை கேட்ட சிறுவர்கள்!… 12 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட அவலம்!

வடகொரியாவில் சினிமா இசையை ரசித்த 2 பள்ளி சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் கடும் வேலை செய்யும் தண்டனையை வடகொரியா அரசு வழங்கியுள்ளது.

கிழக்காசிய நாடான வடகொரியாவில் கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. வெளியுலகம் தொடர்பான தகவல்களை மக்கள் தெரிந்து கொள்ள தடை உள்ளது. அதுபோல, அங்கு நடைபெறும் நிகழ்வுகள் குறித்த தகவல்களும் வெளியுலகுக்கு தெரிவிக்கப்படுவதில்லை. அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் அவருடைய குடும்பத்தாரை பற்றிய செய்திகளும் வெளியுலகுக்கு தெரியாது. இதற்காக, வட கொரியாவில், இணையதளம் பயன்படுத்த, பல கட்டுப்பாடுகள் உள்ளன. வடகொரியாவில் என்ன நடக்கிறது என்பதை உலக நாடுகள் அறிந்துகொள்ள முடியாத வண்ணம் இரும்புத் திரையை வடகொரியாவை சுற்றிலும் கிம் ஏற்படுத்தியுள்ளார்.

வட கொரிய மக்கள் தென் கொரிய மக்களுடன் எத்தகைய தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும், அப்படி தொடர்பு வைத்துக் கொண்டால் சொந்த நாட்டு மக்களுக்கே தண்டனை வழங்கும் கொடூரம் நிலவி வருகிறது. வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் உத்தரவின் பெயரில் இவை முன்னெடுக்கப்படுகிறது, வட கொரியாவில் தென் கொரிய நாடகங்களை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வட கொரியாவில் சினிமா இசையை ரசித்த 2 பள்ளி சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் கடும் வேலை செய்யும் தண்டனையை வடகொரியா அரசு வழங்கியுள்ளது. இது குறித்து டோக்கியோ பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் பேராசிரியர் சோய் க்யோங் ஹுய் பேசிய போது, சிறுவர்களுக்கு இது போன்ற கடுமையான தண்டனை விதித்ததன் மூலம் வட கொரிய மக்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தின் மூலம் தென் கொரிய கலாச்சாரம் வட கொரியாவில் ஊடுருவி வருகிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது

Kokila

Next Post

திமுகவுடன் இணையும் மநீம..!! கோவை தொகுதியை கேட்கும் கமல்..!! நம்பி தரலாமா..?

Sun Jan 21 , 2024
நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழ்நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளும் முழு வீச்சில் இறங்கியுள்ளது. திமுக கூட்டணியில் திமுக, காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் குழுக்களை அறிவித்துள்ளன. திமுக கூட்டணியில் விரைவில் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் தொடங்கப்படும் என தெரிகிறது. திமுக கூட்டணியில் தற்போது காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக, கொமதேக, முஸ்லிம் லீக் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. அதேநேரத்தில் திமுக கூட்டணியில் பாமக, மநீம இணைந்தால் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு […]

You May Like