தீபாவளி முன்னிட்டு, இன்று முதல் 19-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன…!

bus 2025 5

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இன்று முதல் 19-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இன்று முதல் 19-ம் தேதி வரை சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் 5,710 சிறப்பு பேருந்துகள் என 4 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 14,268 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட நாட்களுக்கு 6,110 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 20,378 பேருந்துகள் இயக்கப்படும்.


பண்டிகை முடிந்து பிற ஊர்களிலிருந்து சென்னை திரும்ப வசதியாக 21-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை, தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் 4,253 சிறப்பு பேருந்துகளும், மற்ற பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 4,600 பேருந்துகள் என மொத்தம் 15,129 பேருந்துகளும் இயக்கப்படும். சென்னையில் உள்ள 3 பேருந்து நிலையங்களில் இருந்தும் இந்த பேருந்துகள் இயக்கப்படும். பயணிகள் முன்பதிவு செய்ய வசதியாக கிளாம்பாக்கத்தில் 10, கோயம்பேட்டில் 2 என மொத்தம் 12 முன்பதிவு மையங்கள் செயல்படும். மேலும் டிஎன்எஸ்டிசி செயலி மற்றும் www.tnstc.in இணையதளம் மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

பேருந்துகளின் இயக்கம் மற்றும் புகார் தெரிவிக்க 94450 14436 என்ற தொலைபேசி எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 மற்றும் 044-24749002, 044-26280445, 044-26281611 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். பொதுமக்களின் வசதிக்காக கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மற்ற இரண்டு பேருந்து நிலையங்களுக்கும் செல்ல ஏதுவாக கூடுதலாக 150 மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

2026 சட்டமன்ற தேர்தலில் தவெக தனித்து நின்றாலும் 23% வாக்குகளை கைப்பற்றும்...! வெளியான சர்வே..!

Thu Oct 16 , 2025
2026 சட்டமன்ற தேர்தலில் தவெக தனித்து நின்றாலும் 23% வாக்குகளை கைப்பற்றும் என திமுக நடத்திய ரகசிய சர்வேயில் தெரியவந்துள்ளது. 2026-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அனைவரும் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கும் தேர்தலாக மாறியுள்ளது. தற்போதைய அரசியல் சூழ்நிலையில், திமுக கூட்டணி வெற்றியை தக்கவைத்துக் கொள்ள வாய்ப்பு அதிகம் என்றாலும், புதிய தலைமைகள் மற்றும் இளைய தலைமுறை வருகையால் தேர்தல் கணிக்க முடியாத போட்டியாக மாறலாம். திமுக தலைமையிலான […]
TVk vijay stalin

You May Like