வங்கதேச அணியுடனான போட்டியில் இருந்து ஜடேஜா விலகிக்கொண்டதை அடுத்து மாற்று வீரராக சூரியகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
டி.20 உலக கோப்பை முடிந்த நிலையில் இந்திய அணி நியூநிலாந்துடன் முதல் கட்டத்தை முடித்துள்ளது. இதை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. ஒரு நாள் தொடர் நடைபெற உள்ளது. இது முடிந்த பின்னர் வங்கதேசத்துடன் விளையாடுகின்றது.
அங்கு சென்று மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகின்றது. இத்தொடரில் ரவீந்திர ஜடேஜா இடம்பெற்றிருந்தார். டி20 உலக கோப்பைக்கு முன்பு காயம் காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றார். அவர் குணமடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவர்கள் சில காலம் ஓய்வு எடுக்க கோரியுள்ளனர்.
இதன் காரணமாக அவர் வங்கதேச தொடரில் இடம்பெறவில்லை என தெரியவந்துள்ளது அவருக்கு பதில் அக்சர் படேல் ஏற்கனவே அணியில் உள்ளார் வேறொரு புதிய வீரரை இந்த அணியில் சேர்க்க நிர்வாகம் ஆலோசனை செய்து வருகின்றது. அதில் சூரியகுமார் யாதவுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக பேசப்பட்டு வருகின்றது. கிட்டத்தட்ட அது உறுதியாகத்தான் கூறப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் சூரியகுமார் யாதவ் இடம்பெற்றிருந்தார் ஆனால் பிளேயிங் லெவனில் வாய்ப்புகள் கொடுகக்ப்படவில்லை. தற்போது சிறப்பான ஃபார்மில்இருக்கின்றார் அவருக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டால் சிறப்பான ஆட்டம் உள்ளது.