Edappadi: ஊழல் செய்வதிலும், லஞ்சம் வாங்குவதிலும், சூப்பர் முதலமைச்சர் ஸ்டாலின்…!

தமிழ்நாட்டில் பாஜகவை அடையாளம் காட்டியதே அதிமுக தான் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கு பிறகு அதிமுக என்ற கட்சியே இருக்காது என பேசிய பாஜக மதுரை வேட்பாளர் ராம சீனிவாசனுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்; கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்; 1998ம் ஆண்டு பாஜகவின் தாமரை சின்னத்தை தமிழ்நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டியதே ஜெயலலிதாதான். உங்களுடைய அடையாளத்தையே அதிமுகதான் காட்டியது என்றார்.

வீட்டு வரி, சொத்து வரி, மின்சார கட்டணம், அத்தியாவசிய பொருட்கள் என அனைத்து கட்டணங்களும் விடியா ஆட்சியில் உயர்ந்துவிட்டது. ஊழல் செய்வதிலும், லஞ்சம் வாங்குவதிலும், சூப்பர் முதலமைச்சர் ஸ்டாலின் மட்டுமே. முதல்வர் ஸ்டாலினுக்கு நாட்டு மக்களை பற்றி கவலையில்லை, வீட்டு மக்களை பற்றியே கவலை; மக்களை சந்தித்தால்தான் அவர்கள் அடையும் துயரங்கள் பற்றி முதல்வருக்கு தெரியும். தமிழகத்தில் 10 ஆண்டுகள் நடைபெற்ற அதிமுக ஆட்சிதான் பொற்கால ஆட்சி என கூறினார்.

Vignesh

Next Post

Patiala: பிறந்தநாள் இறந்த நாளாக மாறிய சோகம்.!! ஆன்லைனில் ஆர்டர் செய்த கேக் சாப்பிட்ட 10 வயது சிறுமி பலி.!!

Sun Mar 31 , 2024
பாட்டியாலா நகரில் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட பிறந்தநாள் கேக்கை சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிர் இழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து குறித்த ஆன்லைன் உணவு விநியோக தளத்திற்கு சமூக ஊடகப் பயனர்கள் பலரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் இந்த நிகழ்விற்கு கடும் எதிர்ப்பு வந்த நிலையில் கிளவுட் கிச்சன் தொடர்பான முறையான வரையறை கிலோ கட்டுப்பாடுகளோ இல்லை […]

You May Like