கரையை கடக்கும் புயல்…! எந்தெந்த மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை…? முழு விவரம்…

rain school holiday

சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று நள்ளிரவில் ‘மோந்தா’ புயலாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இது சென்னையிலிருந்து கிழக்கு – தென்கிழக்கே சுமார் 420 கி.மீ தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து தெற்கு – தென்கிழக்கே 470 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

இது வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை தீவிரப்புயலாக வலுப்பெற்று, வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திர கடலோரப்பகுதிகளில், மசூலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினத்துக்கு இடையே, காக்கிநாடாவுக்கு அருகில் தீவிரப்புயலாக இன்று இரவில் கரையைக்கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்று வேகம் மணிக்கு 90 முதல் 110 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். மேலும், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடித்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும். திருவள்ளூர் மாவட்டத்தில் கனமுதல் மிக கனமழையும் சென்னை, செங்கை, காஞ்சிபுரம் ,ராணிப் பேட்டை, தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் மோந்தா புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த புயலானது இன்று தீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ளதால், கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.

Vignesh

Next Post

தலைநகரை நடுங்க வைத்த கல்லூரி மாணவி!. ஆசிட் வீச்சு விவகாரத்தில் டுவிஸ்ட்!. தந்தையின் சதித்திட்டம் அம்பலம்!.

Tue Oct 28 , 2025
டெல்லியில் கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவத்தில் புதிய திருப்பமாக தந்தையின் சதித்திட்டம் அம்பலமாகியுள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ள முகுந்த்பூரைச் சேர்ந்த 20 வயது இளம்பெண், அசோக் விஹாரில் உள்ள லட்சுமி பாய் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன் தினம் வழக்கம் போல் கல்லூரிக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரில் ஒருவர் திடீரென மாணவி மீது ஆசிட் ஊற்றிவிட்டு […]
delhi acid attack case

You May Like