காய்ச்சல் உள்ள மாணவர்கள் விடுமுறை எடுத்து வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும், பள்ளிக்கு வர வேண்டாம் என சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டெங்கு, கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் பரவல் அதிக அளவில் இருப்பதால் மாணவர்களின் உடல்நிலையை கண்காணிக்க பள்ளி கல்வித்துறைக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. காய்ச்சலுடன் பள்ளிக்கு வரும் மாணவர்கள் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவான மற்ற மாணவர்களுக்கு எளிதில் பரவும் அபாயம் உள்ளது. இதனால், காய்ச்சல் உள்ள மாணவர்கள் விடுமுறை எடுத்து வீட்டில் ஓய்வெடுக்கவும், பள்ளிக்கு வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நோய் அறிகுறிகள்: கொரோனா மற்றும் இன்ஃப்ளூயன்ஸா ஆகியவை சுவாசம் சம்பந்தப்பட்ட காரணிகள் மூலம் பரவும் பொதுவான நோய்த் தொற்றுகளாகும். அதேசமயம், டெங்கு என்பது ஏடிஸ் கொசுவால் பரவக்கூடிய ஒரு வகை வைரஸ் தொற்றாகும், மேலும் இது ஒரு மனிதன் மூலம் மற்றொரு மனிதனுக்கு நேரடியாகத் பரவாது.
கொரோனா மற்றும் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் மூலம் நோய் உண்டாவதற்கும், அதன் அறிகுறிகள் வெளிப்படுவதற்கும் பொதுவாக 1 முதல் 4 நாட்கள் ஆகும், அதன் பிறகு காய்ச்சல் 3 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கும். இதன் இந்த இரண்டு நோய்த்தொற்றுகளின் பெரும்பாலான அறிகுறிகள் ஒரே மாதிரியாக இருப்பதால், கொரோனா மற்றும் இன்ஃப்ளூயன்ஸா நோயத்தொற்றுக்கு இடையேயான அறிகுறிகளை கண்டறிவது மிகவும் சிக்கலான ஒன்று.
Read more: SSC CGL: மொத்தம் 14,582 காலியிடங்கள்…! ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்…!