கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு மானியம்…! தமிழக அரசின் அசத்தல் திட்டம்…!

money 2025 2

உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.


சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரான கைம்பெண்கள், ஆதரவற்றோர் கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள மகளிரின் பொருளாதார சவால்களைக் கருத்தில் கொண்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பொருளாதார ரீதியாக அவர்களை வலுப்படுத்தவும் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

2025- 2026 ஆம் நிதியாண்டிற்காக, வறுமை கோட்டிற்குக்கீழ் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ரூபாய் 10,000 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்கும் போது. மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூபாய் 5,000/- மானியத்தொகையாக வழங்கப்படும். இத்திட்டத்தில் கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதியுள்ள மகளிர் கீழ்க்கண்ட சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். தமிழ்நாட்டில் பூர்வீகமாக (பிறப்பிடச்சான்று). வசிப்பவராக இருக்க வேண்டும். வயது வரம்பு 25 வயதிற்கு மேல் இருத்தல் வேண்டும். பிறந்த தேதிக்கான சான்று. திட்டத்தில் முன்னுரிமை பெற வேண்டுமானால் கைம்பெண்கள். ஆதரவற்ற பெண்கள் அல்லது கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் என்பதற்கான சான்று (வட்டாட்சியரிடம் பெறுதல் வேண்டும்) சமர்ப்பிக்க வேண்டும். ஆண்டு வருமான வரம்பு ரூ.1.20 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும் (வருமானச்சான்று வட்டாட்சியரிடமிருந்து பெறுதல் வேண்டும்.

Vignesh

Next Post

முடி உதிர்தல், பொடுகு தொல்லையால் அவதிப்படுகிறீர்களா?. இந்த எலுமிச்சை, வேம்பு டிப்ஸை டிரை பண்ணுங்க!.

Tue Nov 11 , 2025
இப்போதெல்லாம் முடி பிரச்சினைகள் சர்வசாதாரணமாகிவிட்டன. மாசுபாடு, ரசாயனப் பொருட்கள் மற்றும் சமநிலையற்ற வாழ்க்கை முறை காரணமாக, முடி உதிர்தல், பொடுகு மற்றும் உச்சந்தலையில் தொற்று போன்ற பிரச்சினைகள் எல்லா வயதினரிடமும் காணப்படுகின்றன. வணிக ரீதியாகக் கிடைக்கும் ஷாம்புகள் மற்றும் சீரம்கள் குறுகிய காலத்தில் முடியை சிறப்பாகக் காட்டக்கூடும், ஆனால் அவற்றில் உள்ள ரசாயனங்கள் நீண்ட காலத்திற்கு உச்சந்தலையையும் முடியையும் சேதப்படுத்தும். நீங்கள் இயற்கையான முடி பராமரிப்பு வழக்கத்தைத் தேடுகிறீர்களானால், வேம்பு […]
neem lemon water

You May Like