மதிப்பு கூட்டும் மையங்கள் அமைக்க ரூ.1.50 கோடி வரை மானியம்.‌‌..! வெளியான சூப்பர் அறிவிப்பு…!

Tn Govt 2025

100 மதிப்பு கூட்டும் மையங்கள் அமைத்திட தொழில் முனைவோர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக ரூ.1.50 கோடி வரை மானியம் வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவிப்பு.


2025-26ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதி நிலை அறிக்கையில் வேளாண் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் பயன்பெறும் பொருட்டு வேளாண் விளைபொருட்களின் மதிப்புக்கூட்டுதல் மற்றும் பதப்படுத்தும் தொழில் துவங்கும் தொழில் முனைவோர்கள் மற்றும் நிறுவனங்களை ஊக்கப்படுத்த சிறப்புத் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பினைச் செயல்படுத்திட ஏற்கனவே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில், ரூபாய் 10 கோடி வரையிலான மதிப்புக்கூட்டுதல் திட்டங்களுக்கு பொது பிரிவினருக்கு முதலீட்டு மானியமாக 25 சதவீதமும், பெண்கள். தொழில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள வட்டாரங்களில் தொடங்கப்படும் தொழில்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்குக் கூடுதலாக 10 சதவீதம் ஆக மொத்தம் 35 சதவீதம் என அதிகபட்சமாக ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும். இது தவிர அனைத்துப் பிரிவினருக்கும் 5 சதவீத வட்டி மானியம் 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

இத்திட்டம் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், தேர்ந்தெடுக்கப்படும் தொழில்கள் வேளாண்மை, தோட்டக்கலை விளைபொருட்களின் இரண்டாம் நிலை அல்லது மூன்றாம் நிலை பதப்படுத்தும் திட்டங்களாக இருக்கவேண்டும். திட்ட மதிப்பீட்டில் பயனாளிகளின் பங்களிப்பு குறைந்தபட்சம் 5 சதவீதமாக இருக்க வேண்டும் மற்றும் மீதமுள்ள தொகை வங்கிக் கடனாகப் பெறவேண்டும்.

இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தும் வகையில் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களில் நவீன மற்றும் புதுமையான மதிப்பு கூட்டும் திட்டங்கள், ஏற்றுமதித் திறன் கொண்ட விளைபொருட்கள், விரைவில் வீணாகக்கூடிய காய்கறிகள், பழங்கள், பூக்கள் போன்ற தோட்டக்கலைப் பயிர்களில் மதிப்பு கூட்டுதல், மாவட்டத்திற்கே உரிய தனித்துவமான வேளாண் விளைபொருட்களின் மதிப்பு கூட்டுதல் ஆகியவற்றில் ஆர்வமுடைய தொழில் முனைவோர்களை மாவட்டங்கள் தோறும் தேர்வு செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது

Vignesh

Next Post

வாரத்தின் அதிர்ஷ்டமான நாள் எது?. இந்த நாளில் பிறந்தவர்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவர்கள்!.

Thu Nov 20 , 2025
ராசி, ஜாதகம் மற்றும் பிறந்த தேதியின் அடிப்படையில் மக்களின் குணாதிசயம் மற்றும் ஆளுமை பற்றி நீங்கள் நிறைய கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் ஒவ்வொரு நாளும் அதன் சொந்த தனித்துவமான ஆற்றலைக் கொண்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா, அது அந்த நாளில் பிறக்கும் குழந்தையின் ஆளுமை மற்றும் குணங்களில் பிரதிபலிக்கிறது? ஜோதிடத்தின் படி, நீங்கள் பிறந்த வாரத்தின் நாளைப் பொறுத்து உங்களைப் பற்றி நிறைய கற்றுக்கொள்ளலாம். அந்த நாளில் பிறந்தவர்கள் என்ன குணங்களைக் […]
luckiest day

You May Like