தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணத்தில் திடீர் மாற்றம்…!

tvk vijay speech trichy

நாமக்கல் சேலத்தில் டிச.13ம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தவெக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார். கடந்த 13-ம் தேதி திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கிய விஜய், அன்றைய தினம் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 3 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால், வழியெங்கும் அதிகளவில் தொண்டர்கள் திரண்டதால், குறிப்பிட்ட நேரத்துக்குள் அனுமதி வழங்கப்பட்ட இடங்களுக்கு விஜய்யால் செல்ல முடியவில்லை. இதனால், திருச்சி, அரியலூரில் மட்டும் மக்கள் சந்திப்பை நடத்திவிட்டு, பெரம்பலூர் செல்லாமல், விஜய் சென்னை திரும்பினார்.


நாகை, திருவாரூரில் விஜய் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சேலம், நாமக்கலில் வரும் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டு இருந்தார். நாமக்கல், சேலத்தில் 4 இடங்களில் மக்களை சந்திக்கவும், அதில் 2 இடங்களில் விஜய் உரையாற்றவும் திட்டம். நாமக்கல் சேலத்தில் டிச.13ம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில் தேதி மாற்றம் செய்யப்பட்டது. சென்னை, திருவள்ளூரில் 27ம் தேதி விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தது குறிப்பிடத்தக்கது.

விஜய் சுற்றுப்பயண நிகழ்ச்சிக்கு போலீஸார் பல்வேறு நிபந்தனைகள் விதிப்பதாகவும், அனுமதி அளிக்க தாமதிப்பதாகவும், உயர் நீதிமன்றத்தில் தவெக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், கர்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகள், குழந்தைகள் கூட்டத்துக்கு வர வேண்டாம் என எல்லோருக்கும் முன்மாதிரியாக விஜய் தெரிவிக்கலாமே என்றும், நிகழ்ச்சிக்கு வரும் தொண்டர்களை ஏற்பாடு செய்பவர்கள்தான் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பவர்களிடம் இருந்து உரிய இழப்பீட்டு தொகையை வசூலிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

Vignesh

Next Post

2 பானிப்பூரி கம்மியா கொடுத்ததால் ஆத்திரம்!. நடுரோட்டில் அமர்ந்து மறியல் நடத்திய பெண்!. வைரல் வீடியோ!.

Sat Sep 20 , 2025
குஜராத்தில் பானிப்பூரி மீதான மோகத்தால், பெண் ஒருவர் நடுரோட்டில் அமர்ந்து போராட்டம் நடத்திய வீடியோ வைரலாகி வருகிறது. இந்தியாவில் பானிப்பூரி மீதான மோகம் அனைவருக்கும் தெரியும். சிறியவர்கள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர். அப்படி பானிப்பூரி மீது கொண்ட அதீத விருப்பமுள்ள ஒரு பெண், 2 பானிப்பூரி கம்மியா கொடுத்ததை காரணம் காட்டி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டுள்ளார். அதாவது குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள சுர்சாகர் […]
Protest For Pani Puri

You May Like