சர்க்கரை, புற்றுநோயை குணப்படுத்தும் நித்திய கல்யாணி!. நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க!

Nithya Kalyani

நித்திய கல்யாணி ஐந்து இதழ்களையுடைய வெண்மை அல்லது இளஞ்சிவப்பு நிற மலர்களையும் மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் உடைய குறுஞ்செடியாகும். இதனை பட்டிப்பூ, சுடுகாட்டுமல்லி, சுடுகாட்டுப்பூ, கல்லறைப் பூ என பல பெயர்களில் அழைக்கின்றனர்.


நித்திய கல்யாணியை ஆங்கிலத்தில் Periwinkle Flower என அழைப்பார்கள். இதன் இலை கசப்பாக இருப்பதால் ஆடு, மாடுகள் இதனை உட்கொள்வதில்லை. இதை பெரும்பாலும் அழகுக்காக தோட்ட செடியாக மட்டுமே பயிரிட்டு வருகிறோம். ஆனால் இதில் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பல்வேறு விதமான மருத்துவ குணங்கள் உள்ளது.

நித்திய கல்யாணி செடி கார்பன்-டை-ஆக்சைடை தன்னுள்ளே உட்கிரகித்து கொண்டு நூறு சதவீதம் ஆக்சிஜனை நமக்கு வெளியிடுகிறது. ஆகவே இதனை தாராளமாக நாம் வீட்டில் வைத்து வளர்க்கலாம். வெறும் இரண்டு சென்டிமீட்டர் அளவு இருக்கும் இந்த மலர்கள் புற்றுநோய்க்கு தீர்வைக் கொடுக்கும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றது. குறிப்பாக இதற்கு சித்த மருத்துவத்தில் மிகப்பெரிய இடம் உள்ளது. இதன் பயன்களை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

புற்றுநோய்: இதன் இலைகள் மற்றும் பூக்கள் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டிருப்பதால் இது புற்றுநோய் நிலைகளுக்கு சக்தி வாய்ந்தவையாக உள்ளது. புற்றுநோய் கட்டியின் அளவை குறைக்க உதவுகிறது. இதில் உள்ள வின்கிரிஸ்டைன் மற்றும் வின்பிளாஸ்டைன் லுகேமியாவுக்கு பயனுள்ளதாக உள்ளது.

இதில் உள்ள 100 ஆல்கலாய்டுகளும் ஏறக்குறைய மருந்துகள்தான். அவற்றில் வின்க்ரிஸ்டின், வின்ப்ளாஸ்டின் ஆகியவை புற்றுநோய்க்கு மருந்தாகும். நித்திய கல்யாணி பூக்களை பயன்படுத்தி புற்றுநோயாளிக்கான மருந்து தயாரிக்கலாம். இது நெறிக்கட்டிகளை கரைக்கும் தன்மை உடையது. இத்தாவரம் மருத்துவத் துறையில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

உயர் ரத்த அழுத்தம்: வெள்ளை நிறத்தில் இருக்கும் நித்திய கல்யாணி பூ மற்றும் இலைகளின் சாறுகள் உயர் ரத்த அழுத்தத்துக்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக இருக்கும். இந்த இலைகளின் சாற்றை தினமும் காலையில் வெறும் வயிற்றில் 2-3 மில்லி அளவு எடுத்து வரலாம்.

சர்க்கரை நோய்: நீரிழிவு நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது. நீரிழிவு நோய் கப தோஷங்களின் அதிகரிப்பால் உண்டாக கூடியது. இதன் இலைகளை உலர்த்தி பொடி செய்து கண்ணாடி பாட்டிலில் சேர்த்து வைக்கவும்.

1 டீஸ்பூன் உலர்ந்த இலை பொடியை எடுத்து கொள்ளவும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அல்லது எலுமிச்சை பழச்சாறுடன் கலந்து கலந்து எடுக்கலாம்.

நித்திய கல்யாணி பூவில் சிறந்த ரத்த சர்க்கரை குறைவு பண்பு இருப்பதால் இது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. இந்த பூவின் சாறு எடுப்பதன் முலம் கணைய செல்களில் இருந்து இன்சுலின் உற்பத்தியானது தீவிரமாகிறது. மேலும் மாவுச்சத்தை குளுகோசாக உடைப்பதை தடுக்கிறது.

நித்திய கல்யாணியின் 5-6 பூக்களை அரை லிட்டர் நீரில் போட்டுக் காய்ச்சி கால் லிட்டராக்கி 1 நாளைக்கு 4 வேளை கொடுக்க அதிக தாகம், அதிக சிறுநீர்போக்கு அதனால் ஏற்படும் உடல் பலவீனம் சரியாகும். அதிக பசி என்றாலும், பசியின்மையும் தீரும்.

நீரிழிவு நோயாளிகள் இதன் வேர்ச்சூரணத்தை 1 சிட்டிகை எடுத்து வெந்நீரில் கலந்து 2, 3 முறை உட்கொண்டால் சிறுநீர் சர்க்கரை குறைந்து நோய் கட்டுப்படும்.

காயங்களை குணப்படுத்தும்: இது நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் குணப்படுத்தும் பண்புகள் நிறைந்தவை. இது காயத்தை திறம்பட குணப்படுத்துகிறது. தோல் தொற்றுகளை தடுக்கிறது. அரிப்பு மற்றும் எரியும் உணர்வை தடுக்க செய்வதோடு தொற்று பரவாமலும் தடுக்கிறது. காயம் ஆற்றலை எளிதாக்குகிறது. மஞ்சள் மற்றும் நித்திய கல்யாணி இலைகளை பேஸ்ட் செய்து காயங்கள் மீது 2-3 முறை தடவினால் வேகமாக குணமாகும்.

நித்திய கல்யாணி இலையை பயன்படுத்தி புண்களை ஆற்றும் மருந்து தயாரிக்கலாம். ஒரு பாத்திரத்தில் 2 பங்கு தேங்காய் எண்ணெய், ஒரு பங்கு நித்திய கல்யாணி இலை பசை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை ஆறவைத்து வடிகட்டி புண்கள் மேலே பூசுவதால் நல்ல பலன் கிடைக்கும்.

நித்திய கல்யாணி பூக்கள் 10 வரை எடுக்கவும். இதனுடன் கால் ஸ்பூன் கருஞ்சீரகம் சேர்க்கவும். ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர சீழ் பிடித்த, புரையோடிய மற்றும் ரத்தம் கசிகின்ற புண்கள் விரைவில் குணமாகும்.

Readmore: 2015 முதல் மதிப்பெண் சான்றிதழ் பெறாத நபர்களுக்கு பெற்றுக்கொள்ள மீண்டும் ஒரு வாய்ப்பு..‌!

KOKILA

Next Post

முடி வளர்ச்சிக்கு மட்டுமில்லை.. கறிவேப்பிலை சாப்பிட்டால் உடல் எடையும் குறையும்..!! எப்படி தெரியுமா..?

Wed Oct 15 , 2025
Not only for hair growth.. but eating curry leaves can also help you lose weight..!! Do you know how..?
curry leaves

You May Like