கைம்பெண்களுக்கு சூப்பர் அறிவிப்பு..! வரும் 12-ம் தேதி உறுப்பினர் சேர்க்கை முகாம்…!

womens 2025

கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் சார்பில்,உறுப்பினர் சேர்க்கை முகாம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் ஜூன் 12-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இதில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் ஆகியோர் உறுப்பினராக சேரலாம்.


இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சென்னை மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் ஆகியோர்களுக்கான நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 8-வது தளத்தில் வருகிற 12-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

இம்முகாமில் கலந்து கொள்ள பயனாளிகள் தொலைபேசி எண், குடும்ப அட்டை நகல், ஆதார் நகல், அலைபேசி ஆகியவற்றை எடுத்து வந்து www.tnwidowwelfareboard.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களை உறுப்பினராக பதிவு செய்து கொண்டு பயன்பெறலாம். கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்வதால் அவர்கள் விரும்பும் திறன் பயிற்சிக்கு விண்ணப்பிக்க உதவ முடியும். இத்திறன் பயிற்சி மேற்கொள்ளுதல் வாயிலாக சுய தொழில் புரிய மாவட்ட தொழில் மையம் (DIC) மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (TADHCO)ன் கீழ் செயல்படுத்தப்படும் சுய தொழில் திட்டங்களில் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும்.

எனவே, சென்னை மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர் கன்னிகள் ஆகியோர் இம்முகாமில் கலந்து கொண்டு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உறுப்பினர் ஆக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More: சமயம் பார்த்து பாமகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கிய தவெக..? உறுதியாகிறதா..? வெளியான பரபரப்பு தகவல்..!!

Vignesh

Next Post

ஆர்சிபி வெற்றி நிகழ்வில் 11 பேர் பலி!. அல்லு அர்ஜுனை போல் விராட் கோலியும் கைது செய்யப்படுவாரா?.

Thu Jun 5 , 2025
18 ஆண்டுகளில் முதல்முறையாக பெங்களூரு அணியினர் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளனர். வெற்றி பெற்ற ஆர்சிபி அணி வீரர்களை வாழ்த்த பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை காண ஆயிரக்கணக்கில் கட்டுக்கடாங்காமல் ரசிகர்கள் கூடியதால், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 33 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். ஐபிஎல் தொடங்கி 18 சீசன்கள் முடிந்துவிட்டன. முதல் சீசனிலிருந்தே கோப்பைக்காக போராடி வந்த […]
allu arjun virat kohli 11zon

You May Like