தொழில்‌ செய்யும் நபர்களுக்கு செம வாய்ப்பு…! ரூ.10 லட்சம் மானியம் கொடுக்கும் மத்திய அரசு..‌! முழு விவரம்

money tn 2025

பிரதம மந்திரியின்‌ உணவு பதப்படுத்தும்‌ குறு நிறுவனங்களை முறைப்படுத்தும்‌ திட்டம்‌ 2021 முதல் 2025 ஆண்டு வரை 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தி வருகிறது மத்திய அரசு. இத்திட்டத்தில்‌ மானியம்‌ மத்திய அரசின்‌ 60 சதவீதம்‌ மற்றும்‌ மாநில அரசின்‌ 40 சதவீதம்‌ நிதி பங்களிப்புடன்‌ செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில்‌ ஒரு மாவட்டத்திற்கு ஒரு விளை பொருள்‌ என்ற முறையிலும்‌ மற்றும்‌ அனைத்து உணவு சார்ந்த தொழில்களுக்கும்‌ (புதிய மற்றும்‌ விரிவாக்கம்‌) செயல்படுத்தப்படுகிறது.


சிறுதானியங்கள்‌ சார்ந்த தொழில்‌ நிறுவனங்களுக்கும்‌ உணவு பதப்படுத்தும்‌ மற்றும்‌ உணவு சார்ந்த மதிப்புக்‌ கூட்டு தொழில்‌ தொடங்க விருப்பம்‌ உள்ள தனி நபர்‌, மகளிர்‌ சுய உதவி குழுக்கள்‌, உழவர்‌ உற்பத்தியாளர்கள்‌ குழுக்கள்‌ ஆகியோருக்கும்‌, ஏற்கனவே தொழிலில்‌ ஈடுபட்டுள்ள குறு நிறுவனங்களை விரிவாக்கம்‌ செய்தல்‌, புதிய நிறுவனங்கள்‌ தொடங்குதல்‌, குழு அடிப்படையில்‌ பொது உட்கட்டமைப்பு வசதிகள்‌ ஏற்படுத்தி தருதல்‌, வர்த்தகமுத்திரை மற்றும்‌ சந்தைப்படுத்துதல்‌, தொழில்நுட்பப்‌ பயிற்சிகள்‌ போன்ற இனங்களுக்கு மானியத்துடன்‌ கூடிய வங்கிக்‌ கடன்‌ வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில்‌ உணவு பதப்படுத்தும்‌ சூறு நிறுவனங்களுக்கு தகுதியான திட்ட மதிப்பீட்டில்‌ 10 சதவீதம்‌ தொழில்‌ முதலீடு மற்றும்‌ 90 சதவீதம்‌ கடன்‌ பெற்று அவற்றில்‌ 35 சதவீதம்‌ அல்லது அதிகபட்சமாக ரூ. 10 லட்சம்‌ வரை மானியம்‌ வழங்கப்படுகிறது. வர்த்தக முத்திரை மற்றும்‌ சந்தைப்படுத்துதலுக்கு 50 சதவீதம்‌ வரை மானியம்‌ வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின்‌ மூலம்‌ பயன்பெற விருப்பமுள்ளவர்கள்‌ https://www.mofpi.gov.in/pmfme/enews2.html என்ற இணையதள முகவரியில்‌ விண்ணப்பிக்கலாம்‌.

Read More: 11 பேர் உயிரிழந்த விவகாரம்: நீதிபதிகள் எழுப்பிய 9 கேள்விகள்.. இன்று அறிக்கை தாக்கல் செய்யுமா கர்நாடகா அரசு..?

Vignesh

Next Post

சமயபுரம் கோயில் வாசலில் தலை நசுங்கி பக்தர் பலி.. புதிய காருக்கு பூஜை போட வந்த இடத்தில் விபத்து..!!

Thu Jun 12 , 2025
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் வாசலில் தூங்கிக் கொண்டிருந்த பக்தர் மீது கார் ஏறி விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிதாக கார் வாங்கிய நபர் பூஜைக்காக சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு சென்றிருந்தார். அந்த காரை முன்னே நகர்த்தியபோது கட்டுப்பாட்டை மீறி வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. இதனால் கோயில் வாசலில் தூங்கி கொண்டிருந்த நபர் மீது கார் ஏறி இறங்கியது. பக்தரின் தலையில் கார் ஏறியதில் தலை நசுங்கி […]
samayapuram temple accident

You May Like