திமுக அரசு திவால் ஆகிவிட்டதால் விவசாயிகளுக்கு கடன் கொடுக்காமல் அலைக்கழிக்கிறது என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் விவசாயிகளிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி; தொடக்க கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறுவதற்கு பல்வேறு ஆவணங்களை கேட்டு அவர்களை சிரமப்படுத்துகின்றனர். திமுக அரசு திவால் ஆகிவிட்டதால் விவசாயிகளுக்கு கடன் கொடுக்காமல் அலைக்கழிக்கிறது. இதுகுறித்து தஞ்சாவூருக்கு வந்திருந்த பிரதமரிடம் பேசினேன். இப்போது கடன் பெறுவதற்கு ஆவணங்கள் தேவையில்லை என்று கூறுகிறார்கள்.. […]

அரசியல் கூட்டணி குறித்த கருத்துகளை தவிர்க்குமாறு கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு ஓ. பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் மறைவிற்குப் பிறகு தொடர் தோல்விகளை சந்தித்து மக்களின் நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் […]

மக்கள் பிரச்சினைகளுக்காக முதன்முதலாக குரல் கொடுப்பது அதிமுக தான் என கோவில்பட்டியில் நடந்த பிரச்சாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரப் பயணத்துக்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு தூத்துக்குடி மாவட்டத்துக்கு வந்தார். அப்போது கூட்டத்தில் பேசிய அவர்; திமுக ஆட்சி மக்கள் விரோத ஆட்சி. எப்போது இந்த ஆட்சி அகற்றப்படும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். […]

ராமநாதபுரம் சமஸ்தான இளைய மன்னர் நாகேந்திரன் சேதுபதி அதிமுகவில் இணைந்தார். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நாகேந்திரன் சேதுபதி அதிமுக அடிப்படை உறுப்பினராக இணைந்தார். மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ என்று, மக்கள் ஸ்டாலின் ஆட்சியை அகற்ற கோவையில் 7.7.2025 அன்று துவங்கிய எழுச்சிப் பயணம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தொகுதியில் துவங்கி, ஜூலை 25-ம் தேதியில் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை […]

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள், “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி இன்று தஞ்சாவூரின் பல பகுதிகளில் பயணம் மேற்கொண்டார். பட்டுக்கோட்டையில் சுற்றுப் பயணத்தின் பொது உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, “அதிமுக உங்கள் […]